மேலும் அறிய

Malaikottai Vaaliban: மோகன்லால் இன்ட்ரோ காட்சியில் தியேட்டர் அதிரும்...‘மலைக்கோட்டை வாலிபன்’ அப்டேட் கொடுத்த இணை இயக்குநர்!

தேசிய விருது வென்ற இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாள சினிமாவின் உச்ச நடிகரான மோகன் லால் நடித்துள்ள திரைப்படம் ’மலைக்கோட்டை வாலிபன்’.

‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் மோகன்லாலின் இண்ட்ரோ காட்சி பற்றி இணை இயக்குநர் பகிர்ந்துள்ளது மோகன்லால் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

மலைக்கோட்டை வாலிபன்

மலையாள சினிமா தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. தேசிய விருது வென்ற இயக்குநரான இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவின் உச்ச நடிகரான மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. ஷிபு பேபி  ஜான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

முன்னதாக மலையாள சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமான மம்மூட்டியை வைத்து  ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தினை லிஜோ ஜோஸ் இயக்கியிருந்த நிலையில், தற்போது அவர் மோகன்லால் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

மலையாளம் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் நிலையில், பிரசாந்த் பிள்ளை இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

100 கோடி பட்ஜெட்

சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் மல்யுத்த வீரராக இப்படத்தின் மோகன்லால் இப்படத்தில் தோன்றும் நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது குறித்து வீடியோ ஒன்றை படக்குழு பகிர்ந்த நிலையில், மோகன்லாலின் மாஸான காட்சி ஒன்றும் இடம்பெற்று ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் பன்மடங்கு அதிகரித்தது. 

முன்னதாக சென்னை, ராஜஸ்தான், புதுச்சேரி என பல இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது. சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமா உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், மலையாள சினிமா உலகினர் இதுவரை பார்த்திராத புது அனுபவத்தை இப்படம் தரும் என ஏற்கெனவே இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

தியேட்டர் அதிரும்!

இந்நிலையில், ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் மோகன்லாலின் அறிமுகக் காட்சி குறித்து இப்படத்தின் இணை இயக்குநர் பகிர்ந்துள்ள ‘ஸ்கூப் நியூஸ்’ இணையத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இப்படத்தின் இணை இயக்குநர் டினு பாப்பச்சன் பேசியதாவது:  "இந்தப் படத்தைப் பற்றி என்னால் அதிகம் பேச முடியாது. ஆனால் இந்தப் படத்தின் முதல் காட்சியை தியேட்டருக்குள் பார்க்காமல் வெளியில் இருந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். லால் சாரின் அறிமுகக் காட்சியில் தியேட்டர் முழுவதும் அதிரும்!

அந்த மாதிரியான அறிமுகம் அது! வெளியில் இருந்து பார்த்தால் மொத்த திரையரங்கமே அதிரும். இதற்கு மேல் பகிர்ந்தால் லிஜோ ஜோஸ் என்னை அடித்து விடுவார்” எனப் பேசியுள்ளார்.

மலைக்கோட்டை வாலிபன் படம் பற்றிய இணை இயக்குநரின் இந்த பில்ட் அப் பேச்சு இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
Embed widget