Asmitha: தமிழ் பட நடிகையின் வாயை கிழித்து... பல்லை உடைத்த கணவர்! போலீசார் அதிரடி கைது!
நடிகையும் மேக்கப் ஆர்டிஸ்டுமான அஸ்மிதா, தன்னுடைய கணவர் விஷ்ணு மீது கொடுத்துள்ள புகாரின் பேரில், தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்டுகளில் ஒருவர் தான் அஸ்மிதா. தன்னுடைய 13 வயதில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய இவர், 10-ஆம் வகுப்பு முடித்த பின்னர், ஹீரோயினாக நடிக்க துவங்கினார். அதன்படி, அஸ்மிதா ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 'வல்லான்'. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான 'கருங்காலி' திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதன் பின்னர் தென்காசிப்பக்கத்துல, சாமி புள்ள, போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதைப்பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், சினிமாவில் இருந்து விலகி மேக்கப் துறையில் கவனம் செலுத்த துவங்கினார்.

இன்று தமிழகத்தில் உள்ள மிக முக்கிய மேக்கப் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் அஸ்மிதா, அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு, யூடியூப் பிரபலமான விஷ்ணுகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி, 2 குழந்தைகள் பிறந்த பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் கர்ப்பமான அஸ்மிதாவுக்கு போன மாதம் 3-ஆவது குழந்தை பிறந்தது.
அஸ்மிதாவின் கணவர் விஷ்ணு சமீபத்தில் தன்னுடைய நண்பரின் சகோதரியிடம், அண்ணன் என பேசிவிட்டு, பின்னர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவரை அவரின் நண்பர்களே ரவுண்டு கட்டி அடி வெளுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஷ்ணு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்ட போதிலும், அது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே அஸ்மிதா - விஷ்ணு இடையே நடக்கும் பிரச்சனை பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், அஸ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்மிதா கொடுத்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் விஷ்ணுகுமார் கடந்த மார்ச் மாதம் காரில் சென்ற போது, ஓடும் காரில் வைத்து தன்னை தாக்கியதாகவும், தனது வாயை கிழித்ததாகவும், அதில் பற்கள் உடைந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷ்ணு பல பெண்களுடன் தவறான உறவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





















