மேலும் அறிய

Mahesh Babu: அடுத்தடுத்து சோகம்...ஒரே ஆண்டில் 3  குடும்ப உறுப்பினர்களை இழந்த மகேஷ் பாபு!

ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று குடும்ப உறுப்பினர்களை மகேஷ் பாபு இழந்திருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை, தாய், சகோதரர் என ஒரே ஆண்டில் 3 குடும்ப உறுப்பினர்களை இழந்து துயரத்தில் இருக்கும் மகேஷ்பாபுவுக்கு டோலிவுட் திரையுலகினரும் அவரது ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட்டின் ’ப்ரின்ஸ்’ என ரசிகர்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மகேஷ் பாபு, தெலுங்கு தேசம் தாண்டி உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா

இவரது தந்தையும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகருமான கிருஷ்ணா நேற்று அதிகாலை 79ஆவது வயதில் உயிரிழந்தார். இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

தெலுங்கில் 70களில் தன் தந்தை புகழ்பெற்ற நடிகராக கொடிகட்டிப் பறந்த சூழலில், தன் 4ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு உலகில் காலடி எடுத்து வைத்தார் மகேஷ் பாபு.

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தன் தந்தையுடன் இணைந்து படங்களில் நடித்த மகேஷ் பாபு, ’ராஜகுமாருடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டார் நடிகராக உருவெடுக்கத் தொடங்கினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

சகோதரர் ரமேஷ் பாபு

டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய இவரது அண்ணன் ரமேஷ் பாபுவும் முதலில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். தொடர்ந்து 1987 - 1997 ஹீரோவாக பல படங்களில் நடித்த அவர் 2004ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.

மகேஷ் பாபு நடித்த தூக்குடு, அர்ஜூன், அதிதி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுதான். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரமேஷ் பாபு சிறுநீரகப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தாய் உயிரிழப்பு

தொடர்ந்து மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி வயதுமூப்பின் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் உயிரிழந்தார். இவர்களைத் தொடந்து மகேஷ் பாபுவின் தந்தை இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று குடும்ப உறுப்பினர்களை மகேஷ் பாபு இழந்திருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Embed widget