![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maharaja Box Office: ரூ.100 கோடி வசூல்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. அரண்மனை 4 சாதனை முறியடிப்பு!
Maharaja Movie Box Office Collection: இந்த ஆண்டின் அதிவேக 50 கோடி வசூலை எட்டிய படமாக மகாராஜா உருவெடுத்த நிலையில், தற்போது மகாராஜா திரைப்படம் ரூ.100 கோடி வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
![Maharaja Box Office: ரூ.100 கோடி வசூல்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. அரண்மனை 4 சாதனை முறியடிப்பு! Maharaja movie Box Office vijay sethupathi starrer cross 100 crores worldwide Nithilan Swaminathan anurag kashyap Maharaja Box Office: ரூ.100 கோடி வசூல்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. அரண்மனை 4 சாதனை முறியடிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/5c6ae17ea2274d4e2bbefe88104a475c1719899234878574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Maharaja Collects 100 Crores: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனங்கள்.. வசூலில் மாஸ்
விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் மகாராஜா. அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, அபிராமி, நட்டி, பாரதிராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அதன் திரைக்கதைக்காக பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து பாலியல் வன்முறையைக் கையாண்ட விதம் மற்றும் யு/ ஏ சான்றிதழ் உள்ளிட்ட காரணங்களால் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இப்படி கலவையான விமர்சனங்கள் தாண்டி, வசூலில் இப்படம் வெளியானது முதலே ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது.
விஜய் சேதுபதியின் 50வது படம்
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா வசூலில் தொடர்ந்து மாஸ் காண்பித்து வரும் நிலையில், இந்த ஆண்டு நல்ல ஓப்பனிங் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படமாக உருவெடுத்தது. இந்த ஆண்டின் அதிவேக 50 கோடி வசூலை எட்டிய படமாக மகாராஜா உருவெடுத்த நிலையில் தற்போது மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
17 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ.76 கோடிகளுக்கும் மேலாக இப்ப்படம் வசூலித்துள்ள நிலையில், தற்போது உலக அளவில் மகாராஜா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் (Sacnilk) தளம் பகிர்ந்துள்ளது.
ரூ.100 கோடி வசூல்
மேலும், அரண்மனை 4 திரைப்படம் ரூ.99 கோடிகளை மட்டுமே வசூலித்ததாகவும், விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து ரூ.100 கோடி எனும் மைல்கல்லை எட்டிய இந்த ஆண்டின் முதல் தமிழ் படம் எனும் சாதனையைப் புரிந்துள்ளதாகவும் சாக்னின் தளம் பகிர்ந்துள்ளது.
Box Office: #VijaySethupathi's #Maharaja Tops 100 Crore Gross Worldwidehttps://t.co/OiqxyIk3iM
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 2, 2024
2024ஆம் ஆண்டு மலையாளம் சினிமாவுக்கு மாஸ் ஆண்டாக மாறி, அடுத்தடுத்து 100 கோடி வசூல் மழையை அம்மொழி படங்கள் புரிந்த நிலையில், அதற்கு மாறாக தமிழ் சினிமா இந்த ஆண்டின் முதல் பாதியில் தத்தளித்தது. அரண்மனை 4, கருடன், விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸ் ஆகிய சில திரைப்படங்கள் கைகொடுத்த நிலையில், இந்த வரிசையில் தற்போது மகாராஜா இடம்பெற்று தமிழ் சினிமா துறையினரை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2, தங்கலான், ராயன், வேட்டையன், கங்குவா என இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் தமிழ் படங்கள் மூலம் வசூல் வேட்டை ரேஸில் கோலிவுட் மீண்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)