Ustad Rashid Khan: பாலிவுட் திரையுலகில் சோகம்.. புற்று நோயுடன் போராடி வந்த இசைக் கலைஞர் காலமானார்!
Ustad Rashid Khan: பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது வென்ற பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் (Ustad Rashid Khan) உயிரிழந்தார்.
பிரபல இசைக்கலைஞரான உஸ்தாத் ரஷித் கான் புற்று நோயுடன் போராடி வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் . அவருக்கு வயது 55.
உஸ்தாத் ரஷித் கான்
இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் இந்துஸ்தானி இசைக்கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் உஸ்தாத் ரஷித் கான். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பெருமைக்குரிய பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.
இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து திரையிசைப் பாடல்களும் பாடியுள்ளார். ஜப் வி மெட், மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல படங்களில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த ரஷித் கான் இன்று கொல்கத்தாவில் உயிரிழந்தார்.
இந்தி திரையுலகினரை இந்தத் தகவல் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.
உஸ்தாத் ரஷித் கானின் வாழ்க்கை
Music maestro Ustad Rashid Khan passes away at the age of 55
— The Great Bollywood Party (@GreatBollywood) January 9, 2024
Khan, who belongs to the Rampur-Sahaswan Gharana, is the great-grandson of gharana founder Inayat Hussain Khan.
Alvida Ustad Rashid Khan 🤲🏽#ustadrashidkhan pic.twitter.com/m8jyrKg0rb
உத்திர பிரதேசத்தில் படாயுனில் 1968 ஆம் ஆண்டு பிறந்தார் உஸ்தாத் ரஷித். கான் தனது அன்னைவழியைச் சேர்ந்த உஸ்தாத் நிஸ்ஸார் ஹுஸைன் கானிடம் இசைப்பயிற்சிப் பெற்றவர். தனது 11 ஆவது வயதில் தனது முதல் இசைக் நிகழ்ச்சியை நடத்தினார் ரஷித் கான். இதனைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டும் டெல்லியில் ஐ.டி.சி ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 1980 ஆவது ஆண்டு தனது 14 ஆவது வயதில் கல்கத்தாவில் இருக்கும் ஐ.டி.சி சங்கீத் ஆராய்ச்சி கலைக்கூடத்தின் உறுப்பினாராக இணைந்தார். இந்துஸ்தானி இசையில் சிறந்த பயிற்சி பெற்றிருந்த ரஷித் கான் மேற்கத்திய இசையோடு இந்துஸ்தானி இசையை இணைத்து பல்வேறு பரிசோதனைகளை செய்திருக்கிறார்.
ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரஷித் கானுக்கு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகவும் உடனே அவர் தனியார் மருத்துவமனியில் அனுமதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெருமூளை தாக்குதல் ஏற்பட்டதால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் அவரது இறப்பு இசைத் துறையில் இருக்கும் அனைவரையும் உலுக்கியுள்ளது.
மிகப்பெரிய இழப்பு - மம்தா பானர்ஜீ
உஸ்தாத் ரஷித் கானை மருத்தவமனையில் சென்று பார்த்து வந்த மேற்கு வங்க முதலைமச்சர் மம்தா பானர்ஜி “ இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அதே நேரத்தில் இசைத் துறைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பு, உஸ்தாத் ரஷித் கான் இல்லை என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை