மேலும் அறிய

Motivation ; இஞ்சினியர், கறிக்கடைக்காரர், யூ ட்யூபர் : நம்பிக்கையோடு உழைக்கும் உதவி இயக்குநருடன் ஒரு ஜாலி டாக்..!

’வருமானத்துல துபாய் அளவுக்கு இல்லைன்னாலும் மன அழுத்தத்துல இருந்து ரொம்பவே விலகி இருக்கதா தான் உணருறேன், பிடிச்ச விஷயங்கள எக்ஸ்ட்ராவா பண்ணுறேன்’ என்கிறார் உதவி இயக்குநர் புஹாரி ராஜா.

”வடிவேலு பட டயலாக் ’நம்ம வாழ்க்கை எத நோக்கி போகுதுண்ணே தெரியலையே’ மாதிரி தான். இப்போ நீங்க என்னய என்ன வேலை பார்க்குறீங்கன்னு கேட்டா என்கிட்ட எந்த பதிலுமே இல்லை, இப்படி சொல்லுறது கூட உங்களுக்கு என் மேல ஒரு பொறுப்பற்றவனா கூட யோசிக்க வைக்கும். அடிப்படையில ஒரு இஞ்சினியரிங் மாணவன் நான், துபாய்ல கை நிறைய சம்பளம் வாங்குனேன்.  திடீர்னு விட்டுட்டு வந்து  சினிமாவுல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். நடுத்தர வர்க்கத்துக்கான பொருளாதார பிரச்னைகள் துரத்துதுன்னு திரும்பவும் சினிமாவ விட்டுட்டு துபாய்ல இஞ்சினியர் வேல, இப்போ அதையும் விட்டுட்டு இஞ்சினியரிங் முடிச்ச என் தம்பி கூட சேர்ந்து கறிக்கடை வேலை பார்த்துட்டு இருக்கேன். கூடவே நான் பார்க்குற மனிதர்கள், கறிக்கடைய பத்தின நுணுக்கங்கள்,  ஒரு யூடிபராகவும் இருக்கேன்.
 

Motivation ; இஞ்சினியர், கறிக்கடைக்காரர், யூ ட்யூபர் : நம்பிக்கையோடு உழைக்கும் உதவி இயக்குநருடன் ஒரு ஜாலி டாக்..!
 
கேட்குற உங்களுக்கே தலை சுத்துதுல்ல என்னோட கேரியர் கிராப். கூட இருந்து பார்க்குற குடும்பத்துல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும். இப்போவும் ஒரு பயத்தோடதான் என்னய பார்க்குறாங்க. எனக்கும் அந்த பயம் இல்லாம இல்ல, ஆனாலும் அதையும் மீறுன சின்ன நம்பிக்கை மட்டும் அப்போ அப்போ காப்பாத்திட்டு இருக்கு” - கனவுகளை துரத்தும் நடுத்தர வர்க்கத்து இளைஞனின் மனநிலையை யதார்த்தத்தோடு பிரதிபலிக்கிறார் உதவி இயக்குநர் புஹாரி ராஜா. மதுரைக்கார இளைஞர், இஞ்சினியர் , உதவி இயக்குநர், கறிக்கடை நடத்துபவர், யூடியூபர் என  வேறு வேறு முகங்களில் பிரதிபலிக்கும் தன்னம்பிக்கை இளைஞர் புஹாரியிடம் பேசினோம்.
 
Motivation ; இஞ்சினியர், கறிக்கடைக்காரர், யூ ட்யூபர் : நம்பிக்கையோடு உழைக்கும் உதவி இயக்குநருடன் ஒரு ஜாலி டாக்..!
கறிக்கடை ஆர்வம் வந்தது எப்படி பாஸ் ?
 
 ’பள்ளிக்கூடம் படிக்கிற நாட்களிலேயே எனக்கும் கறிக்கடை வேலை பழக்கம் இருக்கு. இஞ்சினியரிங் முடிச்சதும் கேம்பஸ் இண்டர்வியூ ,வெளிநாட்டு வேலைன்னு எல்லாம் கிடைச்சது, ஒவ்வொரு தடவையும் ஆட்கள் குறைப்பு வேலை இல்லைன்னு ஏதாவது பேச்சு வந்தா,எதுவுமே இல்லன்னாலும் கறிக்கடை போட்டு பொழச்சுக்கலாம்னு உள்ள உணர்வு சொல்லும். இது குழப்பமான மனநிலைன்னு சொல்ல முடியாது, நான் எங்க போயி சேரணும்னு ஒரு இலக்கு இருக்கு, படிக்கிற காலத்துல சினிமா ஆர்வம், அதற்கான வழிகள்லயே பயணிக்கலாம்னு வேலைய விட்டுட்டு வந்தேன். ஆனா அத நான் மட்டுமே முடிவு பண்ணமுடியாத சூழல் இருக்கு, இது எனக்கு மட்டுமில்ல, 90 % இளைஞர்களுக்கும் இருக்கிற பிரச்னைதான். இப்போ கறிக்கடையில இருக்கதால, ஆறு மணிநேரம் தான் வேல, முடிச்சு வந்ததும் புடிச்ச சினிமாவ பார்க்குறேன், எதாச்சும் படிக்கிறேன், வருமானத்துல துபாய் அளவுக்கு இல்லைன்னாலும் மன அழுத்தத்துல இருந்து ரொம்பவே விலகி இருக்கதா தான் உணருறேன், பிடிச்ச விஷயங்கள எக்ஸ்ட்ராவா பண்ணுறேன்,
Motivation ; இஞ்சினியர், கறிக்கடைக்காரர், யூ ட்யூபர் : நம்பிக்கையோடு உழைக்கும் உதவி இயக்குநருடன் ஒரு ஜாலி டாக்..!
 
இஞ்சினியர்ல இருந்து விலகி கறிக்கடை இந்த காம்பினேஷனே புதுசா இருக்கே.. தல ?
 
’ஆம என் டீம்ல அம்பது பேரு வேலைபார்த்தாங்க, இங்க கறிக்கடையில லுங்கி கட்டிக்கிட்டு கத்தி பிடிச்சு நின்னத பார்த்து அவுங்களுக்குமே ஆச்சர்யமாதான் பார்த்தாங்க, இன்னும் சிலர் பயமுறுத்துனாங்க. எதுக்கு இங்க விட்டுட்டு அங்க போயி அப்படி நிக்கணும்னு, எல்லாமே அனுபவம் தான் ஒவ்வொரு கால சூழலுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறேன். அறம் சார்ந்து ஒரு தொழில்ல பண்றோம். ஏன் கைலி சட்டையோட நிக்கிறன்னு கேட்குறது கூட, சானியா மிர்சா ஏன் சுடிதா போட்டு டென்னிஸ் விளையாடலன்னு கேட்குற மாதிரிதான்’. என்றார் லந்தாக.
 

Motivation ; இஞ்சினியர், கறிக்கடைக்காரர், யூ ட்யூபர் : நம்பிக்கையோடு உழைக்கும் உதவி இயக்குநருடன் ஒரு ஜாலி டாக்..!
 
வேற என்னெல்லாம் பண்றீங்க... ஜி?
 
கறிக்கடை நேரம் போக, உதவி இயக்குநரா இருந்த காலத்துல என் கூட வேலை பார்த்த நண்பர்கள் படம் இயக்குறதுக்கான முயற்சிகள்ல இருக்காங்க, அதுல கதை விவாதங்களுக்கு கூப்டுவாங்க. அது போக ஏற்கனவே சொன்ன மாதிரி கறிக்கடை நுணுக்கங்களை பற்றியும் , நான் கடந்து வருகிற மனிதர்களோடு நடக்கிற உரையாடல்களையும் பதிவு பண்ணிக்கணும்  என்கிற நோக்கத்துல ’crazy john’னு யூடியூப் தொடங்கிருக்கேன். இது தான் நிரந்தரம்னு இல்ல, நாளைக்கே மனசு வேற ஒரு வேல புதுசா செஞ்சிடுன்னு சொல்லலாம், எல்லாத்தையும் விட்டுட்டு அங்க போயி நிக்கலாம். ஏன்னா இங்க எதுவுமே நிரந்தரம் இல்லைதானே? வெற்றி தோல்வி மீது பெருசா எப்போவும் நம்பிக்கை இருந்தது இல்லை எனக்கு. அது என்னோட நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். ஒரு வேள நான் தோத்துப்போயிட்டு இருக்கேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நானே தான் முழு பொறுப்பு, ஜெயிச்சுட்டு இருக்கான்னு நினைச்சீங்கன்னா அதுக்கு என் நண்பர்கள் பங்கு இருக்கு. குறைந்தபட்சம் ஒரு ஆவணப்படமாவது இயக்கணும்னு கனவு இருக்கு, ஆனாலும் வாழ்க்கை எங்க கை பிடிச்சு கூட்டிட்டு போகுதோ,எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு கூடவே போக பழகிட்டேன். நாளைக்கு எதுவேணும்னாலும் நடக்கலாம். இப்படி பல்வேறு விசயங்கள என் குருகிட்ட கத்துக்கிட்டேன். சினிமால என்னைய எந்த கேள்வியும் இல்லாம உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்ட சீனுராமசாமி சாருக்கு தான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்றார் நெகிழ்ச்சியாக.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RJ Balaji: கத்திமுனையில் நடந்த திருட்டு.. மன உளைச்சலில் ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு படத்தின் பின்னணி இதுவா?
RJ Balaji: கத்திமுனையில் நடந்த திருட்டு.. மன உளைச்சலில் ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு படத்தின் பின்னணி இதுவா?
உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!
உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!
தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!
தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!
குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Best Bikes for City: நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
Embed widget