மேலும் அறிய

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

சென்னையில் தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழைக்கே சாலையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வரும் சூழலில், வடகிழக்கு பருவமழை காலம் தவெக அரசுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழ்வது சென்னை. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இல்லாத பல்வேறு வளர்ச்சியும், வாய்ப்புகளும் சென்னையில் இருந்தாலும் அதே அளவு பல்வேறு பிரச்சினைகளும் உள்ளது.

சென்னையின் பிரதான சிக்கல்:

சென்னை சமீபகாலமாக சந்திக்கும் மிகவும் முக்கியமான பிரச்சினை மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரும், அதனால் உருவாகும் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஆகும். சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களும், வழித்தடமும் அமைக்கும் பணிகளும், பால பணிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசல்:

புதியதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு பல்வேறு சவால்கள் அவர்களின் முன்பாக உள்ள நிலையில், சென்னையை அச்சுறுத்தும் பெருமழை மிகவும் பிரதானமாக உள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழைக்கே சென்னையின் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெருக்கடி நிரம்பிய காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது.

சென்னையைப் பொறுத்தமட்டில் அக்டோபருக்கு பிறகே அதிக மழைப்பொழிவு இருப்பது வழக்கம். குறிப்பாக, டிசம்பர் மாத காலகட்டத்தில் பெருமழை பெய்வது வழக்கமாக உள்ளது. அதுபோன்ற சமயத்தில் மொத்த சென்னையும் மிதப்பதும் வாடிக்கையாக உள்ளது. 

தீர்வு காணுமா தவெக அரசு?

புதியதாக அமைந்துள்ள தவெக அரசு தற்போது சென்னையை பெருமழை பெய்தால் அதிலிருந்து காப்பது எப்படி? என்ற திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை அதன் அவசியத்தை உணர்த்தி வருகிறது. 

சென்னையின் பல்வேறு நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கடலுக்குச் செல்லும் கால்வாய்கள் பலவும் முறையாக தூர்வாரப்படாமலும் இருக்கிறது. 2016 பெருவெள்ளத்திற்கு பிறகு கூவம், அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் பெரும்பாலும் அகற்றப்பட்டு வந்தாலும் தற்போதும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை உடனடியாக அகற்றினால் மட்டுமே சென்னையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மோசமான சாலைகள்:

இதுமட்டுமின்றி, சென்னையின் பல இடங்களில் சாலைகளில் பள்ளமும், மேடும் பரவலாகவே காணப்படுகிறது. பிரதான சாலையான அண்ணாசாலையில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை போன்ற பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சாலைகளையும் தரமான முறையில் செப்பனிட முதலமைச்சர் விஜய் உடனடி உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது.

தவெக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள சென்னை பெருமழை மற்றும் மழைக்கால போக்குவரத்து நெருக்கடியை முறையாக விஜய் கையாண்டால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Highest Range EV Scooters: நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
Maruti Suzuki New Baleno: கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
Embed widget