மேலும் அறிய

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

தர்ஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இது ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்தாலும், மறுபுறம் வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்யலாமா என தொடர் கேள்விகளும் எழுந்து வருகிறது.

பணத்துக்காக அதீத கவர்ச்சி காட்டவோ அல்லது எல்லை மீறவோ மாட்டேன். என் அம்மா அப்படி வளர்க்கவில்லை என நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். 

கோயம்புத்துரைச் சேர்ந்த தர்ஷா குப்தா விஜய் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவிலும் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட், தலைமைச் செயலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்றார்.

இப்படியான நிலையில் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இது ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்தாலும், மறுபுறம் வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்யலாமா என தொடர் கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் Renown செயலி ஒன்றை தர்ஷா குப்தா அறிமுகம் செய்தார். இதில் தன்னுடன் வீடியோ காலில் பேச ரூ.6,000, பிராண்ட் புரமோஷனுக்கு ரூ.50,000, ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டு 3 மாதங்கள், 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் ஆஃபர்களும் வழங்கப்படுவதாக அறிவித்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகுந்த மனவேதனையுடன் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.  அதாவது, “இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து வந்தவர்களிடம், நான் எப்படிப்பட்டவள் என்பதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 

Renown செயலி என்பது, என் ரசிகர்கள், எனக்கு குடும்பம் போன்றவர்கள், என்னிடம் தங்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாள் வாழ்த்துகளைப் பெறவோ, அல்லது என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவோ முடியும் என்றுதான் நான் நினைத்தேன். அதுதான் நான் அதில் இணைய சம்மதித்த ஒரே காரணம். நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமான் சாட்சியாக இருக்கிறார்.

அந்த தளத்தில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது.என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்.

என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து நம்பியவர்கள், நான் ஒருபோதும் இல்லாத ஒரு நபராக என்னை நினைத்திருக்கலாம் என்பதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்திற்காக என்னை நினைக்க வேண்டாம்” என தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget