மேலும் அறிய

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் படம் வெளியானது. டைட்டில் கார்டுக்கே ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டனர்.ஆனால் படம் வசூலில் சறுக்கியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்து ஜனநாயகன் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

தடைகளை கடந்த ஜனநாயகன்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகராக தமிழக முதலமைச்சர் விஜயின் கடைசிப் படமாக உருவானது “ஜனநாயகன்”. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 23ம் தேதி வெளியானது. 

முன்னதாக ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்ததால் பட வெளியீடு தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஏப்ரல் 10ம் தேதி திடீரென ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் திருட்டுத்தனமாக கசிந்தது. இதுதொடர்பாக அப்படத்தில் பணியாற்றிய நபர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முதல் வாரம் வசூல் வழை

இதற்கிடையில் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஜனநாயகன் படத்தை வெளியிடும் பணிகள் தொடங்கியது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் இப்படம் வெளியானது. டைட்டில் கார்டுக்கே ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டனர். ஏ சான்றிதழ் பெற்றதால் சிறுவர்கள் இப்படத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

Also Read: பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

ஜனநாயகன் படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக மட்டும் சுமார் 1.20 கோடி பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் தியேட்டரில் படம் வெளியானபோது ரசிகர்கள் கூட்டம் கூட்டமான சென்று ஜனநாயகனை கொண்டாடி விஜய்க்கு ஃபேர்வேல் பார்ட்டி கொடுத்தனர். இதனால் ஜனநாயகன் படம் முதல் வாரத்தில் வசூலை வாரிக் குவித்தது.  ஆனால் இரண்டாம் வார வசூலுடன் ஒப்பிடுகையில் 79 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் இப்படம் ரூ.200 கோடியை கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரம் 18 வயதிற்குட்பட்டவரகள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அனைத்து தியேட்டர்களும் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தின் வசூல் எகிறும் என பார்த்தால் வார நாட்களில் தியேட்டர்கள் டல்லடிக்கிறது. வார இறுதி நாட்கள் மட்டுமே வசூல் ஓரளவு கிடைப்பதாக தியேட்டர் நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. ஜனநாயகனுக்குப் பின் வந்த ஸ்பைடர்மேன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் கடைசிப் படம் அதள பாதாளத்திற்கு செல்லும் என யாருமே நினைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget