மேலும் அறிய

‛அம்மா... அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளந்த புள்ள...‛ மதுரை ஒலிம்பிக் பெண் ரேவதியின் பாட்டி நெகிழ்ச்சி!

‛‛அவள் ஓட்ட போட்டியில் கலந்து  கொள்ளும் போது நான் வேண்டாம்னு சொன்னேன். பொம்பள பிள்ளை ஓடும் போது கீழே விழுந்து அடிப்படும். இதலாம் வேணாம்த்தானு சொன்னே,’’ என, பேசும் போதே உடைகிறார் அவரது பாட்டி!

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில்  தேர்வாகி உள்ள மதுரை சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  தாய் , தந்தையை இழந்த ரேவதியை அவரது பாட்டி ஆரம்மாள் வளர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

‛அம்மா... அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளந்த புள்ள...‛ மதுரை ஒலிம்பிக் பெண் ரேவதியின் பாட்டி நெகிழ்ச்சி!
 
ரேவதியின் பாட்டி ஆரம்மாளிடம் பேசினோம்... , ‛‛சின்னப் பிள்ளையா இருக்கும் போதே ரேவதியையும், அவளது தங்கச்சியும்  விட்டுவிட்டு அவங்க அப்பா,  அம்மா இறந்து போய்டாங்க. அவங்க  இல்லாத நிலைமைல தான் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சேன். அவள் ஓட்ட போட்டியில் கலந்து  கொள்ளும் போது நான் வேண்டாம்னு சொன்னேன். பொம்பள பிள்ளை ஓடும் போது கீழே விழுந்து அடிப்படும். இதலாம் வேணாம்த்தானு சொன்னே. அவளது திறமையை பார்த்துட்டு அவளோட கோச்சு சார் கண்ணன் அதிகமாக  விளையாட வச்சாரு. ரேவதி இந்த மைதானத்தில் வெறும் காலில் தான் ஓடினாள். சூ வாங்கக் கூட என்னிடம் வசதி கிடையாது. எல்லாம் கண்ணன் சார் தான் சூ வாங்கி கொடுத்து அவளை இந்தளவுக்கு கொண்டு வந்தார். கண்டிப்பா என்னுடைய பேத்தி எல்லா போட்டியிலையும் ஜெயிச்சு பெயர் எடுத்துக் கொடுப்பா" என்றார் நெகிழ்ச்சியாக

‛அம்மா... அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளந்த புள்ள...‛ மதுரை ஒலிம்பிக் பெண் ரேவதியின் பாட்டி நெகிழ்ச்சி!
 
மேலும் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன்...," ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மன நிறைவை தந்துள்ளது. மதுரையிலிருந்து முதல் பெண்மணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மதுரை மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமையாக உள்ளது. ரேவதி பிளஸ்2 படிக்கும் போதில் இருந்து  மண்டல அளவிலான தடகள போட்டியில் காலில் சூ இல்லாமல் தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். காலில் சூ இல்லாத நிலையிலும் திறமையுடன் விளையாடி பரிசுகளை தட்டியுள்ளார்.
 
‛அம்மா... அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளந்த புள்ள...‛ மதுரை ஒலிம்பிக் பெண் ரேவதியின் பாட்டி நெகிழ்ச்சி!
அதனை பார்த்து அவரிடமும் அவரை வளர்த்து வந்த பாட்டியிடம்  பேசி பயிற்சி அளிக்கபட்டது. கல்லூரி அளவிலான 100 மீட்டர், 400 மீட்டர் தடகள போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து ஆசிய அளவிலான தடகள போட்டியில் 4வது இடம் பிடித்தார். தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் பயிற்சி எடுத்ததால்  டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு சாதனையாளருக்கு பின்னணியில் ஒரு முள்படுக்கை இருக்கும். ரேவதிக்கு மட்டும் பஞ்சு மேத்தையா இருக்கப்போகிறது. அவர் இன்னும் பல சாதனைகளை தட்டட்டும். 
 
தலைப்பு செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget