பொறுத்தது போதும் பொங்கி எழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்..ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மனுதாக்கல்
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா சென்னை ஆணையரகத்தில் புகாரளித்திருந்த நிலையில் தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்க செய்துள்ளார்

தன்னை திருமண் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். மேலும் சென்னை காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி மீது புகாரளித்திருந்தார். இப்படியான நிலையில் தனது கேடரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
யார் பக்கம் உண்மை ?
தென் இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் இல்லாமல் இருக்காது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகாரளித்து சர்ச்சையை கிளப்பினார். தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கி விட்டுச் சென்றதாக அவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார். மேலும் தொடர்ச்சியாக அவரை குற்றம் சுமத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களையும் , தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருவதால் யார் தரப்பில் உண்மை உள்ளது என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது.
ஜாய் கிரிஸிட்லாவுக்கு எதிராக மனு
இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் கேடரிங் நிறுவனம் சார்பாக ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாதம்பட்டி பாகசாலாவின் நிறுவனரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவதூறு பரப்பும் விதமான எந்த வித செய்தியையும் ஜாய் வெளியிட தடை கோரி இந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. பல்வேறு அரவு மற்றும் தனியார் நிறுவனங்களின் மத்தியில் அங்கீகரிப்பட்ட நிறுவனமான மாதம்பட்ட பாகசாலாவுக்கு எதிராகவும் அதன் நிறுவனரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் எந்த வித அடிப்படை ஆதராங்களும் இல்லாமல் முன்வைக்கப்பட்டவை எனவே ஜாய் கிரிஸில்டா மேற்கொண்டு அவதூறு பரப்பும் விதமாக பேசுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தரப்பு வக்கீல் பி.எஸ் ராமன் கோரிக்கை வைத்தார்
ஜாய் கிரிஸில்டாவுக்கு நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார் ஜாய் கிரிஸில்டா செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் மாதம்பட்டி பாகசாலா சார்பாகவும் தனிப்பட்ட நோட்டீஸ் ஒன்றை அனுப்ப சொல்லி இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.





















