Maaveeran Twitter Review : ஆரவாரத்துடன் சிவகார்த்திகேயனை கொண்டாடிய ரசிகர்கள்.. மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
Maaveeran Movie Twitter Review : மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை காணலாம்.
தேசிய விருதை வென்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மாவீரன் படம் ஜூலை 14 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.
சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில் சில காரணங்களால் பின்னடைந்த சிவாவிற்கு நெல்சனின் டாக்டர் படமும் சிபிசக்கரவர்த்தியின் டான் படமும் பேக் டூ பேக் ஹிட்டாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படங்களுக்கு பின், பிரின்ஸ் படத்தில் நடித்தார். இது சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைதொடர்ந்து சிவாவுடன் இயக்குநர் மிஷ்கின், சரிதா அதிதி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த மாவீரன் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.
கதைச்சுருக்கம் : பயந்த சுபாவம் கொண்ட சிவா, ஊடகத்தில் ஓவியராக வேலைப்பார்க்கிறார். விபத்துக்குள்ளாகும் சிவாவிற்கு ஏதோ சூப்பர் பவர் கிடைக்கிறது. அதன் பின் வானிலிருந்து ஏதோ ஒரு குரல் ஒலிக்க, அடிக்கடி அண்ணாந்து பார்க்கிறார். இவர், பத்திரிக்கைக்காக வரையும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. அரசியல் வாதிகளை கண்டு அஞ்சும் சிவா, சந்தர்ப்ப சூழலில் அவர்களிடம் சிக்கிகொள்கிறார். அதன் பின் நடப்பது படத்தின் மீத கதை.
ட்விட்டர் விமர்சனம் :
இன்று வெளியாகியுள்ள மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம். ‘முதல் பாதிக்கு பின் வரும் இடைவெளி பயங்கரமாக உள்ளது. ஃபேண்டஸிக்கு பஞ்சம் இல்லை. மாஸ், காமெடி, எமோஷன் என அனைத்தும் சமமாக உள்ளது. இரண்டாம் பாதியை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.’ என பொது மக்களில் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
#Maaveeran review
— Nishant Rajarajan (@Srinishant23) July 14, 2023
First half
Interval block ends in an extreme high!
Fantasy elements kick in well.
Mass, Comedy, fantasy and emotion is rightly balanced so far!
The second half will make or break this film as to how this drama ends ✌️#SK on a roll❤️🔥
Very happy for him.
‘ஜெயிட்டோம் மாறா.. வீரமே ஜெயம்’ என்ற டீவிட் படத்தின் வெற்றியை குறிக்கிறது.
Finally today #Maaveeran fight Day jaichidu maara❤️🔥🤌
— DEXTER😈 (@Dexter_Vj2) July 14, 2023
Veerame Jayam 🧘🔥#MaaveeranFDFS #SivaKartikeyan https://t.co/iIq7qKXa0p pic.twitter.com/i33lglB87M
‘இது ஒரு பக்கா எண்டர்டெயினர்' - முதல் காத்தை பார்த்த சினிமா ரசிகர்
#Maaveeran 1st half - Pucca entertainer so far 👍
— Ar@vinth💗𝓥𝓲𝓳𝓪𝔂👑 (@Arvinthn1) July 14, 2023
First half நல்லா இருக்கு 👍 #Maaveeran
— saidaijagan (@saidaijagan) July 14, 2023
மாவீரன் படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை ட்வீட் செய்து, இப்படத்தின் வசனங்களை சூப்பராக எழுதியுள்ளனர் என ஒருவர் பதிவிட்டுள்ளார்
மக்கள் பிரச்சினைய தட்டி கேக்கதவங்க எல்லாம் என்னங்க மாவீரன்??
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) July 14, 2023
Dialogue Writting 🫡💯#MaaveeranFDFS #Maaveeran #MaaveeranReview