மேலும் அறிய

Maaveeran : வீரமே ஜெயம்.. மாவீரன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி எஸ்கே ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. 

மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின். அவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்வியால் சிறு சிறு சறுக்கலை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் மீது அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் தான் மாவீரன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 

Maaveeran : வீரமே ஜெயம்.. மாவீரன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
அதி நவீன கேமரா :

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிநவீன மோகோபாட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, இது போன்ற அதிநவீன மோகோபாட் கேமராக்கள் 'விக்ரம்' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாலை 6 மணிக்கு புதிய அப்டேட் ஒன்றை மாவீரன் படக்குழு வெளியிடும் என்ற அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் புதிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். 

Maaveeran : வீரமே ஜெயம்.. மாவீரன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியானது ரிலீஸ் தேதி :

மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். "என் அருமை சகோதர சகோதரிகளே! உங்களை ஆகஸ்ட் 11-ஆம் தேதி சந்திக்கிறேன்... வீரமே ஜெயம் !" என தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த தகவல் எஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மாவீரன் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு அதிரடி என்ட்ரி கொடுப்பர் சிவகார்த்திகேயன் என உறுதியாக காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.   

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget