Watch Video | கலர் லைட்ஸ்.. டான்ஸ்.. தியேட்டர் வாசலை டிஸ்கோ ஆக்கிய சிம்பு ரசிகர்கள்.!
Maanaadu: சென்னை ரோகிணி திரையரங்கு வாசலில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு ரசிகர்கள் ஒன்று கூடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.
படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், ஸ்னீக் பீக்கும் ரசிகர்களிடையே வைரலானது. இதற்கிடையே மாநாடு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று ட்வீட் செய்த மாநாடு தயாரிப்பாளர் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me. #Maanaadu
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
மீண்டும் பிரச்னை சரிசெய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. இதனால் ரசிகர்கள் குஷியாகினர். இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கு வாசலில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு ரசிகர்கள் ஒன்று கூடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இன்று காலை 5 மணி காட்சி பல பல இடங்களில் ரத்தானதால் நேற்று இரவு முதலே காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
#Maanaadu party started at @RohiniSilverScr 🤩💥💯 #Atman @SilambarasanTR_ in #MaanaaduFDFS party 🔥 #SilambarasanTR #MaanaaduDeepavali @hariharannaidu @jefferyjoshua pic.twitter.com/wX0Nt55MIM
— அஸ்வத் (@aswathofficial) November 24, 2021
.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்