மேலும் அறிய

Puducherry Election 2026: புதுச்சேரியில் மோடியின் ‘மெகா’ ரோடு ஷோ! அனல் பறக்கும் தேர்தல் களம்!

Puducherry Election 2026: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சென்னை:  புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்.

புதுச்சேரி தேர்தல் களம்: 294 வேட்பாளர்கள் போட்டி

புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் பெறப்பட்ட மனுக்களில் 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மார்ச் 26-ம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்தது. தற்போது இறுதிப் பட்டியலின்படி, புதுச்சேரி தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

கூட்டணி நிலவரம் மற்றும் தொகுதிப் பங்கீடு

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), திமுக-காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியும் (I.N.D.I.A) மோதுகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவையும் களத்தில் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ: ஏப்ரல் 3-ல் வருகை

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 2-ம் தேதி கேரளாவில் பிரச்சாரத்தை முடிக்கும் பிரதமர், அங்கிருந்து சென்னை வழியாகப் புதுச்சேரி வருகிறார். முன்னதாக மார்ச் 30-ம் தேதி மாலை 5:30 மணிக்கு 'எனது பூத் வலிமையான பூத்' (Mera Booth Sabse Mazboot) என்ற காணொளி வாயிலாக புதுச்சேரி நிர்வாகிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது:

  • அதிமுக: 169 தொகுதிகள்
  • பாஜக: 27 தொகுதிகள்
  • பாமக: 18 தொகுதிகள்
  • அமமுக: 11 தொகுதிகள்

கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை நிலவுவதால் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், திமுக தலைமையிலான கூட்டணி தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு தேர்தல் களத்தில் முன்னிலை பெற முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரின் வருகை தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget