மேலும் அறிய

GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!

பாமக-வின் மூத்த தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகே தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக-வை உருவாக்கிய ராமதாசுக்கு பக்கபலமாக இருப்பவர் ஜிகே மணி. பாமக-வில் ராமதாசிற்கு அடுத்தபடியாக மிகுந்த செல்வாக்கு மிகுந்த நபராக திகழும் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரன். தந்தையின் ஆதரவுடன் பாமக-வின் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், ராமதாஸ் அன்புமணி மோதலின்போது அன்புமணி மீதான எதிர்பார்ப்பால் அவர் பாமக-வில் இருந்து விலகினார்.

காங்கிரஸில் ஜிகே மணி மகன்:

இந்த சூழலில், தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் இன்று காங்கிரஸில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் வேலையில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்துள்ள ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென்னாகரத்தில் போட்டியா?

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள அன்புமணி தலைமையிலான பாமக மாம்பழ சின்னத்தில் பென்னாகரத்தில் போட்டியிட உள்ளது. பாமக-வின் கோட்டையாக இந்த பென்னாகரம் தொகுதி கருதப்படுகிறது. 

அதேசமயம் வன்னியர் சமுதாய வாக்குகளை குறிவைத்து இந்த முறை மகனுடன் ஏற்பட்ட மோதலால் ராமதாஸ் தனது ஆதரவாளரையும் களமிறக்க உள்ளார். இவர்கள் இருவருக்கும் போட்டியாக தமிழ்க்குமரனை களமிறக்க திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே பாமக-வில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது தந்தை ஜிகே மணிக்கு எதிராக மகன் தமிழ்க்குமரன் களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை பாமக மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த தமிழ்க்குமரன்?

திரைப்படத் தயாரிப்பாளரான தமிழ்க்குமரன் என்றென்றும் புன்னகை படத்தை தயாரித்துள்ளார். லைகா திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார்.  இவர் கடந்த 2010ம் ஆண்டு பாமக சார்பில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெரியண்ணனிடம் தோல்வி அடைந்தார்.

லைகா நிறுவனம் தயாரித்த டான், பொன்னியின் செல்வன் 1, பட்டத்து அரசன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், திருவின் குரல், பொன்னியின் செல்வன் 2, தீராத காதல், சந்திரமுகி 2, மிஷன் சாப்டர் 1, லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி, லாக்டவுன், சிக்மா ஆகிய படங்களுக்கும் தயாரிப்பு தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். நாச்சியார் படத்தில் சிறிய காட்சியிலும் நடித்துள்ளார்.

வாக்குகளை கைப்பற்ற தீவிரம்:

பென்னாகரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதி முழுக்க முழுக்க கூட்டணி கட்சிகளுக்கு   திராவிட கட்சிகள் ஒதுக்கியுள்ளது. இதனால், இந்த தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளை வைத்துள்ள வன்னியர் சமுதாய வாக்குகளை கைப்பற்ற வேட்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget