Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது? - Society of the Snow படத்தை பாராட்டிய வைரமுத்து
தியேட்டர்கள், டிவிசேனல்கள் தவிர்த்து உலக படங்களை காணும் இடமாக ஓடிடி தளங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு அமைந்துள்ளது
கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் படம் ஒன்றை பார்த்தது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தியேட்டர்கள், தொலைக்காட்சி சேனல்கள் தவிர்த்து உலக படங்களை காணும் இடமாக ஓடிடி தளங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் அமைந்துள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஆஹா, ஜீ 5, சன் நெக்ஸ்ட் என பல ஓடிடி தளங்கள் தமிழில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாதம், ஆண்டு சந்தா அடிப்படையில் கட்டணமானது நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ கடந்த ஜனவரி 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 1972 ஆம் ஆண்டு ஆண்டில் உருகுவேயின் நிகழ்ந்த விமான விபத்தின் கொடூரமான பின்னணியை அடிப்படையாக கொண்ட உண்மைக் கதையாகும். உருகுவே ரக்பி அணியை சிலிக்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம் ஆண்டிஸ் மலைகளின் மையப்பகுதியில் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த நபர்கள் உடனடியாக மீட்பு எதுவும் இல்லாமல் ஒரு பாழடைந்த டன்ட்ராவில் சிக்கித் தவித்தனர். இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் என்ஸோ வோக்ரின்சிக், மாட்யாஸ் ரீகால்ட், அகஸ்டின் பர்டெல்லா, டியாகோ வெஜெஸி, எஸ்டெபன் குகுரிஸ்கா, ரஃபேல் ஃபெடர்மேன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஜே ஏ பயோனா இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ள இந்த படம் பெட்ரோ லுக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு
— வைரமுத்து (@Vairamuthu) January 14, 2024
ஸ்பானிஷ் படம் பார்த்தேன்
ஒரு பனிமலையில்
விழுந்து உடைகிறது விமானம்
விமானத்தின்
உடைந்த கூடே கூடாரமாய்
உயிர்காக்கப் போராடுகிறார்கள்
பிழைத்தவர்கள்
பசியின் உச்சத்தில்
இறந்த பயணிகளின்
இறைச்சியை உண்ணுகிறார்கள்
இறுதியில்
எப்படி மீட்கப்பட்டார்கள்
என்பது கதை
‘Society of the Snow’… pic.twitter.com/o84BLbuh9E
அதில், “ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன் ஒரு பனிமலையில் விழுந்து உடைகிறது விமானம். விமானத்தின் உடைந்த கூடே கூடாரமாய் உயிர்காக்கப் போராடுகிறார்கள் பிழைத்தவர்கள். பசியின் உச்சத்தில் இறந்த பயணிகளின் இறைச்சியை உண்ணுகிறார்கள். இறுதியில் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது கதை ‘Society of the Snow’ படம் முடிவதற்குள் பனிக்கட்டி ஆகிவிடுகிறது ரத்தம். இப்படி ஒற்றைப் பொருள் குறித்த படங்கள் தமிழில் எப்போது?” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Guntur Kaaram Review: மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!