மேலும் அறிய

Guntur Kaaram Review: மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!

Guntur Kaaram Review in Tamil: தெலுங்கில் இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”.

Guntur Kaaram Review in Tamil: தெலுங்கில் இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். 

படத்தின் கதை

ஆளும் கட்சியின் தலைவரான பிரகாஷ்ராஜ், தனது மகளாக ரம்யா கிருஷ்ணனை அமைச்சராக்க நினைக்கிறார். இது பிடிக்காத சக அரசியல்வாதியான சேர்ந்த ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணனின் முந்தைய கால வாழ்க்கை பற்றிய விவரங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுகின்றனர். கடந்த காலத்தில் கொலை வழக்கில் தன்னுடைய கணவர் ஜெயராம் ஜெயிலுக்கு சென்று விட, மகன் மகேஷ் பாபுவை விட்டு விட்டு தந்தையின் வற்புறுத்தலால் வேறொரு திருமணம் செய்து கொள்கிறார். 

இதனிடையே ரம்யா கிருஷ்ணன்  அரசியல் வாழ்க்கைக்கு பாதகம் வந்துவிட கூடாது என்பதால் பிரகாஷ்ராஜ் ஒரு திட்டம் போடுகிறார். ஜெயிலில் 25 வருட சிறை தண்டனை பெற்று ரிலீசாகி வரும் ஜெயராம், தனது மகன் மகேஷ் பாபுவுடன் வாழ்ந்து வருகிறார். மகேஷ் பாபுவை அழைத்து வந்து தனது அம்மாவுக்கும் , மகனுக்கு சம்பந்தம் இல்லை என்பதை ஆவணங்களில் கையெழுத்திட மறுக்கிறார். இதனால் மகேஷ் பாபுவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியாக தனது அம்மா ரம்யா கிருஷ்ணனுடன் உறவை மகேஷ் பாபு முறித்து கொள்வாரா? இல்லை இருவரும் ஒன்றிணைந்தனரா? என்பதே குண்டூர் காரம் படத்தின் கதையாகும்.

நடிப்பு எப்படி? 

குண்டூர் காரம் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது மகேஷ் பாபுதான். அவர் மட்டுமே போதும் என இயக்குநர் த்ரி விக்ரம் நினைத்து விட்டார் என தோன்றுகிறது. அதற்கேற்றவாறு சண்டை, பாசம், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். மகேஷ் பாபுவின் நடிப்பு கொஞ்சம் காரம் தூக்கலாகவே உள்ளது. இவர்களை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜூக்கு மட்டுமே முக்கியமான கேரக்டர்கள் உள்ளது. அவர்களுக்கு  பெரிய அளவில் ஸ்கோப் இல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

படம் தியேட்டரில் பார்க்கலாமா?

இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் அது திரைக்கதை தான். கதைப்படி சிறப்பாக இருக்கும் குண்டூர் காரம் ஒரு படமாக ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே உள்ளது. த்ரி விக்ரம் சென்டிமென்ட் சீன்களில் புகுந்து விளையாடுபவர். அந்த காட்சிகளும் கதைக்கு தேவையான ஒன்றாகவே இருந்தது. ஆனால் குண்டூர் காரம் படத்தில் தேவையே இல்லாத காட்சிகள் அதிகளவில் உள்ளது. சண்டை, பாடல் எல்லாமே கொஞ்சம் கூட ஒன்றவில்லை என்றே தோன்றுகிறது. த்ரி விக்ரமின் வழக்கமான டைமிங் டயலாக்குகள் எல்லாம் இதில் உள்ளது. மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவும், தமனின் பின்னணி இசையும் படத்தை தாங்கி பிடிக்கிறது. ஆக மொத்தத்தில் கதை என்ற உணவில் காரம் மட்டுமே இருந்தால் பத்தாது இல்லையா.. அந்த மாதிரி தான் குண்டூர் காரமும் பார்க்க மட்டுமே அழகு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget