Lyca on Thunivu: ஸ்கெட்ச் போட்ட லைகா.. துணிவு ஓவர்சீஸ் உரிமையை தூக்கிக்கொடுத்த போனிகபூர்.. லேட்டஸ்ட் அப்டேட்!
போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது லைகா நிறுவனம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3வது முறையாக இணைந்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளததால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் சமுத்திரகனி, ஜான் கோக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா உடன் கூட்டணி சேரும் துணிவு :
'துணிவு' திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் திகைக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படம் குறித்து வெளியான தகவலின் படி போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளது லைகா நிறுவனம். மேலும் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் முதல் முறையாக உருவாகவிருக்கும் AK 62 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகியுள்ளது.
.@LycaProductions to distribute #Thunivu in overseas. They are also the producers of #AK62! pic.twitter.com/bnNsVv8L43
— Rajasekar (@sekartweets) November 19, 2022
தமிழ்நாடு உரிமை :
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 'துணிவு' திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். மேலும் இப்படத்தின் ஓடிடி தளத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Thunivu Locked and Loaded 🔥#ThunivuWithLycaProductions pic.twitter.com/ii2LABMMaU
— Trollywood (@TrollywoodX) November 19, 2022
ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் :
அஜித் குமார் நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா...' பாடலை பாடியுள்ளார் ராக் ஸ்டார் அனிருத். இந்த பவர்ஃபுல்லான ஒரு தெறிக்கவிடும் பாடல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்க்ஷன் பணிகள் மிகவும் தீவீரமாக நடைபெற்று வரும் நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.