Poonam Pandey: காமசூத்ரா குறித்து வர்ணித்த பூனம் பாண்டே...! பச்சை கொடி காட்டிய கங்கனா ரனாவத்..!
ஆபாச படங்கள் குறித்து மனம் திறந்து பேசினார் பூனம் பாண்டே
லாக் அப்..
கங்கனா ரனாவத்தின் புதிய ரியாலிட்டி ஷோ லாக் அப்(Lock Upp) சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஏக்தா கபூர் தயாரித்த இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய மற்றும் மிகவும் அச்சமற்ற ரியாலிட்டி ஷோவாக இருக்கும் என்று கூறப்பட்டது.
அங்கு 16 சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பல மாதங்களாக லாக்-அப்பில் வைக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான சர்ச்சைக்குரிய பிரபலங்களின் அனைத்து வசதிகளும் பறிக்கப்படும். இந்த கேம் உங்களை உங்கள் இருக்கையில் ஒட்ட வைக்கும் அனைத்து பொருட்களுடன் ஈர்க்கும் கேப்டிவ் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் பிரபல அடல்ட் நடிகை பூனம் பாண்டே(Poonam Pandey) பங்கேற்கிறார்.
கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவுக்கு பூனம் பாண்டே பொருந்துவார் என்று பாலிவுட் ரசிகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு கவர்ச்சியைக் கையிலெடுத்தவர். அதுமட்டுமின்றி நடிகை, மாடல் என்பதை விட அதிகமாக சர்ச்சைகளில் சிக்குபவர் என்பதால் அவர் இந்த ஷோவுக்கு ஏற்ற போட்டியாளர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக கங்கனா ரனாவத்துடன் பூனம் கலந்துரையாடினார்.
View this post on Instagram
பூனம் பாண்டே..
உரையாடலின் போது, ஆபாச படங்கள் குறித்து பூனம் மனம் திறந்து பேசினார். இந்தியா காமசூத்ராவின் பூமி என்று அழைக்கப்படுவதைப் பற்றி பேசிய அவர், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று தெரிவித்தார். மேலும் “காமசூத்ரா அழகு” எனக் குறிப்பிட்டார். பூனத்தின் கருத்தை ஆமோதித்த கங்கனா, ஆமாம் காமசூத்ரா ஒரு 'கலை' என்றார்.
View this post on Instagram
மேலும் பேசிய பூனம் பாண்டே, '' நான் மிகவும் சாதாரண ஆள். நான் சர்ச்சைக்குரியவள் அல்ல. நான் ஆடையில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு செல்லமாட்டேன். என் வாழ்க்கையில் பலதவறுகளை செய்துள்ளேன். நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டேன். அதையெல்லாம் சரியாக்கிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்