ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
இந்தியாவிலே அதிக மைலேஜ் அளிக்கும் 3 இ பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் எண்ணிக்கையும் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
அந்த வரிசையில் இந்தியாவிலே அதிக மைலேஜ் தரும் டாப் 3 இ பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. OLA Roadster Pro:
இந்தியாவிலே அதிக மைலேஜ் தரும் இ பைக்காக இருப்பது இந்த OLA Roadster Pro. இதில் 2 வேரியண்ட் உள்ளது. இதில் 16 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. அதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 194 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பைக்கில் செல்லலாம். எகோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் மோட் உள்ளது. சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் உள்ளது. யுஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 10 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதி உள்ளது.
2. OLA Roadster X Plus:
ஓலா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இ பைக்காக இந்த OLA Roadster X Plus உள்ளது. இதில் 2 வேரியண்ட் உள்ளது. இதில் 9.1 கிலோவாட் பொருத்தப்பட்ட இ பைக் ஒரே சார்ஜில் 501 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ட்வின்ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் ஆகும். எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.
3. Ultraviolette F77 Mach 2:
ஸ்போர்ட்ஸ் லுக்கில் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Ultraviolette F77 Mach 2 இ பைக்கில் 12 வேரியண்ட் உள்ளது. இதில் 10.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக் ஒரே சார்ஜில் 323 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 155 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த டாப் வேரியண்ட்களின் விலை ரூபாய் 4 லட்சத்து 48 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்து 833 வரை ஆகும். சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.
இந்த 3 இ பைக்குகளுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் இந்த இ பைக்குகளை விரும்புகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















