மேலும் அறிய

சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மூலமாக வருமானத்தை அதிகரிக்க அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதியதாக அமைந்துள்ள தவெக அரசு எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று நிதி நிலைமையை சீர்செய்வது ஆகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பல்வேறு கடன்களால் தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது.

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள்:

இந்த சூழலில், தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கு விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக பிரபல பொருளாதார நிபுணர் மான்டேக்சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அறநிலையத்துறை மூலமாகவும் வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோயில்களுக்கு சொந்தமாக பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த கோயில் நிலங்களை அறநிலையத்துறையே நிர்வகித்து வருகிறது.

சோலார் மின் உற்பத்தி நிலையங்கள்:

இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாய பயன்பாடு இல்லாமல் காலியாகவே உள்ள நிலங்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் காலியாக உள்ள இடங்களில் சோலார் மின் உற்நத்தி நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளனர், இதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தி அமைச்சர் ரமேஷ் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் மின் தேவைக்கான மின்சாரம் கிடைப்பதுடன் இதன் மூலம் அறநிலையத்துறையின் வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு அதிகளவு மின்சாரம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மின்சாரத்தை தொழில்துறை, வீட்டுப்பயன்பாடு போன்ற அத்தியாவசிய பயன்பாட்டிற்கு பகிர்ந்து பயன்படுத்துவார்கள் என்றும் கருதப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை

பழனி கோயில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத் தன்மையும், எந்தவித குளறுபடியும் நடந்துவிடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வேறு வடிவத்திலும் வருமானம்:

இந்த வருவாயை தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு கீழே மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள், அந்த துறைக்கான செலவினங்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி நிலங்களை சோலார் பயன்பாடு மட்டுமின்றி வேறு எந்தெந்த வடிவங்களில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்? என்றும் தொடர்ந்து அதிகாரிகளுடன் அமைச்சர் ரமேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அறநிலையத்துறை மட்டுமின்றி மற்ற துறைகள் மூலமாகவும் வருவாயைப் பெருக்குவதற்கான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Embed widget