திரையரங்க வெளியீடு தவிர்க்கப்பட்டு OTT-இல் வெளியாகும் கோலிவுட் படப்பட்டியல் இதோ..
கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல திரைப்படங்கள் தற்பொழுது நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்பொழுது அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது . இதனால் ட்சினிமாத்துறை மற்றும் திரை அரங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே திரை அரங்குகளில் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி என்ற நிலையில் பல திரைப்படங்கள் தற்பொழுது ஓடிடி-யில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் . ஓடிடி பக்கம் தற்பொழுது தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பியுள்ளது .
துக்ளக் தர்பார் - இந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பார்த்திபன், ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், காயத்ரி கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
டாக்டர் - நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , யோகி பாபு, வினய் , பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் டாக்டர். அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மார்ச் 26-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்தநிலையில் கொரோனா காரணமாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு . ரம்ஜான் அன்று படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது அதிகாரப்பூர்வ தகவல் மிகவிரைவில் வெளியாகும் .
ஜகமே தந்திரம் - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக படம் வெளியாகும். படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் வெளியாகும் .
நெற்றிக்கண் - மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண் . கண் தெரியாத வேடத்தில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒரு நாய் மற்றும் கண் தெரியாத நயன்தாரா இவர்களை மட்டும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. தற்பொழுது இந்தப் படமும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது .
மாமனிதன் - சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா சேர்ந்து இசையமைத்துள்ளனர். தற்பொழுது திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. இன்னும் பல படங்கள் இதனைத் தொடந்து OTT-இல் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன .