Tamil Directors : வசூல் வேட்டையர்கள்... அதிக வசூல் ஈட்டிய படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர்கள்!
அதிக வசூல் ஈட்டிய படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ரூ 300 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் லியோ திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகளில் வெளியான தமிழ் படங்களைக் காட்டிலும் லியோ திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு கவனிக்கத்தக்கது. லியோ திரைப்படம் வசூல் வேட்டையைத் நடத்தட்டும் நாம் அதிக வசூல் ஈட்டிய படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
அட்லீ - ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா நடித்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜவான். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ 1000 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது. ரூ.1000 கோடி வசூல் ஈட்டிய ஒரே தமிழ் இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத் தக்கது.
ஷங்கர் - 2.0
ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 2.0. எமி ஜாக்சன், அக்ஷய் குமார், இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது. உலக அளவில் ரூ 699 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நெல்சன் - ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜெயிலர் . ரஜினிகாந்த், மோகன்லான், தமன்னா, ஷிவராஜ் குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
மணிரத்னம் - பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆர். பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வரியா ராய், ஷோபிதா , ஐஷ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், கிஷோர், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. உலகளவில் ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
லோகேஷ் கனகராஜ் - விக்ரம்
லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கிய படம் விக்ரம். ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, செம்பன் வினோத், காயத்ரி, அர்ஜுன் தாஸ், சூரியா இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசைமைத்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயரித்தது. திரையரங்கத்தில் 100 நாட்கள் ஓடிய விக்ரம் திரைப்படம் உலக அளவில் ரூ.430 கோடி வசூல் செய்தது.