Independent Music-க்கு இதுதான் காலம்.. மில்லியன் ஹார்ட்ஸை அள்ளிய சூப்பர்ஸ்மார்ட் லிஸ்ட் இதோ..
ஆரம்ப காலகட்டத்தில் இந்தக் கலைஞர்கள், தங்களின் இலக்குகளை அடைய, குறிப்பாக மக்களை சென்றடைய தொலைக்காட்சி, ரேடியோ போன்ற மீடியம் தேவைப்பட்டது. இப்போது நிலைமையே வேறு..
நீங்கள் Instagram-இல் ரீல்ஸ் செய்பவராகவோ அல்லது அதை பார்ப்பவராகவோ இருந்தால் இந்தப் பதிவுகளோடு உங்களால் கனெக்ட் ஆக முடியும். இன்ஸ்டாகிராமில் நீங்கள் ஸ்க்ரால் அப் செய்யக்கூடிய பெரும்பாலான பாடல்கள், ஏதோ ஒரு படத்தில் மிகப்பெரிய பொருட்செலவில், ஹிட் அடித்த பாடலாக இருக்காது. அந்த பாடலை இசையமைத்தவரோ, பாடியவரோ, வரிகளை எழுதியவரோ நீங்கள் அறிந்த செலிபிரிட்டியாகவும் இருக்கமாட்டார்கள். அந்த பாடல்கள் அனைத்தும் "independent music" அதாவது சுயாதீன இசை அல்லது சுதந்திர இசையாகத்தான் இருக்கும்.
சுதந்திர இசை என்பதை நீங்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடியாது. அது ராப், கானா, கர்னாடிக், வெர்ஸ்டன் என தனித்தனியாகவும் இருக்கலாம் அல்லது இவை அனைத்தும் கலந்தும் இருக்கலாம். இது முற்றிலுமாக அந்த பாடல் குழுவின் தனித்திறமையை பொருத்தே அமைகிறது. தங்களுக்கான நூற்றாண்டு போராட்டங்களை இசை வடிவில் வெடித்துத்தள்ள இன்று "Casteless Collective" போன்ற சுயதீன குழுக்களும் தயாரகிவிட்டன.
பொருட்செலவில், சவுண்ட் எஃபெக்ட்டில் உருவாகும் இசையை விட இந்த மாதிரியான இசை மக்களை எளிமையாக சென்றடைந்துவிடுகிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் இவ்வகை கலைஞர்கள் இலக்கை அடைய, குறிப்பாக மக்களை அடைய தொலைக்காட்சி, ரேடியோ போன்ற மீடியம் தேவைப்பட்டாலும், தற்பொழுது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இவ்வகை கலைஞர்களுக்கு பெரும் உறுதுணையாக உள்ளது.
இவர்களுக்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுதான், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் "மஜ்ஜா" என்ற அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் உலகெங்கிலும் உள்ள தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து சுயாதீன இசைக்கான பயணத்தில் இணைந்துள்ளர். இந்த மஜ்ஜா தளத்தில் முதன் முதலாக வெளியான பாடல்தான் "என்ஜாயி எஞ்சாமி" இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு சுதந்திர கலைஞர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்க வேண்டும். இந்த பாடலை, தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். சுயதீன இசைக்கலைஞர்களின் சிறப்புகளின் ஒன்று பாடகர்களே வரிகளை எழுதுவதுதான். மஜ்ஜா தவிர்த்து சோனி மியூஸ் போன்ற மிகப்பெரிய இசைத்தளங்களும் சுயதீன பாடல்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர்
உங்களை தினம்தோறும் கடந்து செல்லும் சுயதீன பாடல்களில், பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த சில பாடல்கள் இதோ
1. நான் குடிக்க போறேன் !
இந்த பாடல் இதுவரையில் 60,750,342 பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த பாடலை
சஹி சிவா, மற்றும் Rap பகுதியை ராட்டி ஆதித்தன் ஆகியோர் பாடியுள்ளனர்.
2. ஒரசாதே!
இந்த பாடல் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது . இது 86,753,037 கடந்துள்ளது.
பாடகர்கள் மார்வின் ஸ்லோமன் மற்றும் விவேக் சிவா இதனை பாடியுள்ளனர். கு.கார்த்திக் என்பவர் பாடல்களுக்கான வரிகளை எழுதியுள்ளார்.
3. கும்பலாக சுத்துவோம்
கடந்த ஆண்டு கானா ஸ்டீபன் குரல் மற்றும் கேலி செய்வதை போன்ற வரிகளால் உருவான இந்த பாடல் பலரின் ஃபேவரேட் . இது இதுவரையில் 9,841,763 பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு பெனட் க்ரிஸ்டோஃபர் இசையமைத்துள்ளார்
4. குட்டி பட்டாசு
இந்த பாடல் கடந்த மாதம் வெளியாகி 47,559,732 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது . இதனை சந்தோஷ் தயாநிதி இசையமைத்து பாடியுள்ளார். மேலும் பெண் குரலை ரக்ஷிதான் சுரேஷ் பாடியுள்ளார். பாடலுக்கான வரிகளை எ.ப.ராஜ எழுதியுள்ளார்
5. ஸ்டவ் மேல கடாயி
இந்த பாடல் இதுவரையில் பெற்றிருக்கு பார்வையாளர்கள் 68,042,650 பேர். இதனை ஜூனியர் நித்யா என்பவர் பாடியுள்ளார். மிரன் என்பவர் வரிகளை எழுதியுள்ளார். இன்றைய இளைஞர்களின் குத்துப்பாடல் தேர்வில் டாப் லிஸ்டில் இருப்பது இந்த பாடல்தான்