மேலும் அறிய

LEO New Poster: முதல்ல பனி... இப்போ நெருப்புடன் வந்த விஜய்... கேம் ஆஃப் த்ரோன்ஸை நியாபகப்படுத்தும் ‘லியோ’ போஸ்டர்!

லியோ படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், அனல் தெறிக்க விஜய் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ள லியோ படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது.

போருக்கு தயாராகும் விஜய்!

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்க் கிழமை தொடங்கி  விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து வருகிறது. செப்.17, 18 ஆகிய இரு தினங்கள் விஜய்யின் போஸ்டர்கள் வெளியான நிலையில், நேற்று நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் காரணமாக போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி லியோ படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அனல் பறக்க சக்கரத்தை தயார் செய்து கொண்டிருப்பது போன்ற இந்த போஸ்டர் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

பனியும் நெருப்பும்

மேலும் பனி, நெருப்பு என கேம் ஆஃப் த்ரான்ஸின் தீமான ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்பதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று துப்பாக்கியின் மத்தியில் விஜய் புகைப்படம் இடம்பெற்றிருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

கதை சொல்லும் போஸ்டர்கள்

மேலும் முதல் போஸ்டரில் “அமைதியாக இரு... போரைத் தவிர்” எனும் வாசகமும், இரண்டாம் போஸ்டரில் “அமைதியாக இரு , தப்பிக்க திட்டமிடு” எனும் வாசகமும் இடம்பெற்றிருந்தன.

அந்த வரிசையில் தற்போது வெளியாகி மூன்றாம் போஸ்டரில், “அமைதியாக இரு, போருக்குத் தயாராகு” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே செவன் ஸ்க்ரீன் நிறுவனம் போஸ்டர்கள் வழி கதைகள் வெளிவரும் என அறிவித்தது போல் அடுத்தடுத்து வெளியாகி வரும் இந்த போஸ்டர்கள் ஒரு ஒரு ஹிண்ட் கொடுப்பது போல் அமைந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

ஏதோ ஒரு மோசமான ஃப்ளாஷ்பேக்கை கொண்ட ஹீரோ அமைதியாக இருந்து பின் சரியான நேரம் பார்த்து காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக பழிவாங்க தயாராவது போல் இந்தக் கதை அமைந்திருக்கும் என போஸ்டர்களின் வழி தெரிய வருகிறது.

அடுத்த அப்டேட் என்ன?

நாளை மற்றுமொரு போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லியோ போஸ்டர் திருவிழா என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டர் வெளியீட்டைத் தொடர்ந்து அடுத்ததாக லியோ இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. விஜய், த்ரிஷா இருவரும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணையும் நிலையில், இப்படத்தின் மீது இருவரது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் அர்ஜூன், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஸ்கின், நடிகர்கள் மன்சூல் அலிகான், ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ், கொரியோகிராஃபர் சாண்டி என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் ரத்தை வலியுறுத்தி மதுரை மேலூர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாத மண்டல பூஜை: கோவில் நடை 15- ஆம் தேதி திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாத மண்டல பூஜை: கோவில் நடை 15- ஆம் தேதி திறப்பு
Rajasthan BJP Minister: சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி, பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
சொன்ன சொல் தவறமாட்டேன் : தேர்தல் சவாலில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்
Embed widget