Leo New Stills: இதுதான் லியோ தாஸின் அழகான குடும்பம்.. அசரடிக்கும் விஜய், க்யூட் த்ரிஷா.. புது ஸ்டில்கள் வெளியீடு!
லியோ திரைப்படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்க்கும் லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பட வெளியீட்டுக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், பட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லியோ தாஸாக நடிக்கும் நடிகர் விஜய் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், தன் மகளுக்கு பாடம் எடுக்கும் புகைப்படம், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ஆகியவை வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களைக் குவித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் ‘ஆக்ஷன், ஆக்ஷன்’ எனும் கேப்ஷனுடன் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து தன் பங்குக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ACTION, ACTION AND MORE ACTION!!! 🔥🔥🔥#LeoFromOctober19 #LEO 🔥🧊 pic.twitter.com/n6PzGINrYs
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 13, 2023
இன்று லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்கப்பட வேண்டும் என்றும், இறுதிக்காட்சி 1.30 மணிக்கு நிறைவடைய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணம், திரையரங்க கட்டணம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.