மேலும் அறிய

Lal Singh Chaddha: இணையத்தில் லீக் ஆன ‘லால் சிங் சத்தா’ காரணமானவர்கள் கைது... நடந்தது என்ன?

’லால் சிங் சத்தா’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’லால் சிங் சத்தா’  திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலை மையமாகக் கொண்ட ‘லால் சிங் சத்தா’ என்னும் இந்தி திரைப்படம் கடந்த 11–ந்தேதி வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் திருட்டுத்தனாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Red Giant Movies (@redgiantmovies_)

 பெங்களூரில் உள்ள சினிபோலிஸ், ஓரியண்ட் மாலில் இருந்து வயாகாம்18  நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையின் போது இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இதுபோன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Lal Singh Chaddha: இணையத்தில் லீக் ஆன  ‘லால் சிங் சத்தா’ காரணமானவர்கள் கைது... நடந்தது என்ன?
 
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வழக்கறிஞர் அனில் லாலே
 
இது குறித்து வயாகாம்18 நிறுவனத்தின் வழக்கறிஞர்அனில் லாலே கூறுகையில், திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்கு எதிரான போராட்டத்தில் வயாகாம்18 தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பாக அத்துடன், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடாத நிலையை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியைத் நாங்கள் தொடருவோம். இது போன்ற அத்துமீறலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் ஆகும்.

Lal Singh Chaddha: இணையத்தில் லீக் ஆன  ‘லால் சிங் சத்தா’ காரணமானவர்கள் கைது... நடந்தது என்ன?

நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறோம். அத்துடன் இவ்வாறு செய்கையில் திரைப்படத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் நிம்மதியாக இருக்க அது வழிவகுக்கும் என்று தெரிவித்தார். திருட்டுத்தனமாக திரைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்காக சமீபத்தில் வயாகாம்18 நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட வலைதளங்கள் மற்றும் இணைப்புகள், குறிப்பிட்ட கேபிள் ஆபரேட்டர்கள், இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் முகம் தெரியாத நபர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை ஆணையை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது "லால் சிங் சத்தா" திரைப்படத்தை முறைகேடாக வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படத்தயாரிப்பாளர்களின் முறையான அனுமதி இல்லாமல் எந்த வகையிலும் படத்தை நகலெடுப்பது, பதிவுசெய்தல், மறுஉருவாக்கம் செய்தல், வினியோகம் செய்தல் அல்லது பதிவிறக்கம் செய்தல் ஆகியவை சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget