‛இது தான் எங்க உலகம்...’ குழந்தைகளோடு குதூகலித்த குஷ்பூ-ரம்பா!
Kushboo: என்னோட பழைய தோழியை சந்தித்த அந்த தருணம்... இதை விட வேற என்ன சிறப்பு வேண்டும்
குஷ்பூ மேடம் ரொம்ம ஜாலியா இருக்காங்க...என்ன காரணம்? செல்ஃபி பாத்தீங்கன்னா தெரியும்
90'ஸ் களில் கொடி கட்டி பறந்த கொலு கொலு நடிகை குஷ்பூ. கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூவிற்கு ரசிகர்கள் தங்கள் நெஞ்சங்களில் கோயில் கட்டி கொண்டாடினர். தற்போது இவர் அரசியல்வாதியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அவ்வபோது பல பதிவுகள், போட்டோக்களை பகிர்வது வழக்கம். சமீபத்தில் குஷ்பூவின் பதிவு ஒன்று மிகவும் வைராகி வருகிறது.
90'ஸ் களில் இளவட்ட பசங்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த ஒரு அழகான, கவர்ச்சியான தொடை அழகி நடிகை ரம்பா. குஷ்பூவும் ரம்பாவும் அன்றில் இருந்தே நெருங்கிய தோழிகள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்திக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவர் மட்டுமின்றி இவர்களது குழந்தைகளுக்கு இடையிலும் நல்ல நட்பு இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு தனது பழைய தோழியை சந்தித்ததில் பேரானந்தம் கொண்டு ஏராளமான செல்ஃபிகளை கிளிக் செய்துள்ளார். அதில் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பூ. அவை இப்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இவர்களின் சந்திப்பின் கொண்டாட்டத்தில் புகைப்படங்கள் பரிமாற்றம், சுவையான ஆடம்பரமான பிரியாணி, ஆனந்தமான சிரிப்பு என ஒரே ஆனந்தம் தான். இதை விடவும் ஒரு சிறப்பான தருணம் வேறு ஏதாவது இருக்க முடியுமா. இந்த கொண்டாட்டத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டது மேலும் சிறப்பு.
இந்த சந்திப்பு நடிகை ரம்பாவின் அழகான இல்லத்தில் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் அந்த மாலை பொழுதை மிகவும் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் கொண்டாடினர். நடிகை ரம்பா மிகவும் அன்பான இதயம் கொண்டவள் என்று தனது குறிப்பில் பகிர்ந்துள்ளார். விரைவில் இருவரும் மீண்டும் சந்திப்போம். "மிஸ் யூ ஜெயா" ( நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலக்ஷ்மி )என்று குறிப்பிட்டு இருந்தார் நடிகை குஷ்பூ.
இருவரும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள். அவர்கள் இருவருக்கும் இடையில் அன்றும் எந்த ஒரு போட்டியோ வெறுப்புபோ இருந்ததில்லை. இன்றும் அதே அன்புடனும் ஸ்நேகிதத்தோடும் இருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அதிகரித்துள்ளது.
நடிகை ரம்பா தனது 15 வயதில் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அவரின் முதல் படம் மலையாளத்தில் 1992ம் ஆண்டு வெளியான "சர்கம்" திரைப்படம். மின்சார கண்ணா, சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் குஷ்பூவும் ரம்பாவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.