மேலும் அறிய

Kurangu Pedal: அரண்மனை 4 படத்தால எங்க படம் ஓடல.. “குரங்கு பெடல்” படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் பளிச்!

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தால் தான் இயக்கிய குரங்கு பெடல் படத்துக்கு பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கமலகண்ணன்

2012ஆம் ஆண்டு 'மதுபானக்கடை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். ஒரு வைன் ஷாப்பில் மது அருந்துபவர்களுக்கு இடையில் நடப்பது தான் இப்படத்தின் கதை. இதில் காதல், அரசியல் என எல்லா விஷயங்களைப் பற்றிய உரையாடலும் நிகழும். விமர்சகர்களிடையே இப்படம் பாராட்டுக்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வட்டம் படத்தை இயக்கினார். இந்த ஆண்டு இவர் இயக்கிய ‘குரங்கு பெடல்’ படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். 

நான்கு இளைஞர்கள் தங்கள் கோடை விடுமுறையில் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதில் அவர்களுக்கு வரும் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு அவர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்களா என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து நிகழும் கதை குரங்கு பெடல். 90களில் வளர்ந்தவர்களில் இளமைக் காலத்தை நினைவூட்டும் வகையில் இப்படத்தில் பல தருணங்கள் அமைந்திருந்தன. திரையரங்கத்தைத் தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியது.

அரண்மனை படத்தால் என் படம் ஓடவில்லை

இந்நிலையில், சமீபத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குநர் திரையரங்கில் தனது படம் பெரியளவில் கவனிக்கப்படாதது பற்றியும் அதன் காரணத்தையும் தெரிவித்தார். “குரங்கு பெடல் படம் வெளியான அதே சமயத்தில் தான் ‘அரண்மனை 4’ வெளியானது. அடுத்த வாரம் ஸ்டார் படம் வெளியானது. இதனால் எங்கள் படத்திற்கு போதுமான கவனம் கிடைக்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை வழங்குகிறார் என்கிறபோது குரங்கு பெடல் படம் ஓரளவுக்கு கவனம் பெற்றது.

குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் எங்களுக்கு நஷ்டமும் ஏற்படவில்லை. இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் இதே மாதிரி குழந்தைகளை மையப்படுத்திய இன்னும் நான்கு படங்கள் வந்திருக்கும். பெரும்பாலான மக்கள் படங்களை ஓடிடி தளத்தில் தான் பார்க்கிறார்கள். குரங்கு பெடல் படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு  இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்காமல் போய்விட்டேன் என்று எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள். இந்தப் படங்களை எல்லாம் எப்படியும் நீங்கள் திரையரங்கில் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த குற்றவுணர்ச்சியோடு கொஞ்ச நாள் இருங்கள் என்று நான் நினைத்துக் கொள்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க : Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!

Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget