Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?
தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகை என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகை “வரலட்சுமி”.
இவர் அவ்வப்போது பேசும் திடமிக்க கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும். தான் நடிக்கும் படத்தின் கதாபாத்திரம் என்னவாக இருந்தாலும் அதற்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதற்கான முழு முயற்சியையும் செய்வார் வரு. சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 போன்ற படங்களில் வில்லியாக நடித்தும் அசத்தியிருந்தார், இது அவருக்கு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் பாலகிருஷ்ணாவின் படம் ஒன்றில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குநரில் ஒருவரான கோபிசந்த் இந்த படத்தை இயக்கவுள்ளார். கொரோனா சூழல் காரணமாக படம் குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை.
Happy birthday to balaiah babu garu...eagerly waiting to meet you on sets soon sir..to feel the roar in live..🦁🔥🔥#NBK107 @MythriOfficial 🎉@MusicThaman #HappyBirthdayNBK 🔥https://t.co/171NvSWZOk
— Gopichandh Malineni (@megopichand) June 10, 2021
இந்நிலையில் வரலட்சுமி படத்தில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் படத்தில் வரலட்சுமியின் காதாபாத்திரம் குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை. எனவே அவர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போடுகிறாரா அல்லது வேறு ஏதும் முக்கிய கதாபாத்திரத்திற்காக தேர்வாகியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கோபிசந்த் இயக்கத்தில் வெளியான “க்ராக் “ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் வரு. வரலட்சுமி தற்பொழுது தமிழில் பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யானை,காட்டேரி ஆகிய திரைப்படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் பாலகிருஷ்ணாவின் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் கோபிசந்த். இந்த திரைப்படத்தை மைத்திரி புரொடெக்சன் தயாரிக்கிறது, படத்திற்கு தமாம் இசையமைக்கிறார். நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 61 வது பிறந்த நாளை கடந்த 10-ஆம் தேதி கொண்டாடினார். அதற்கு டோலிவுட் வட்டார முன்னணி நடிகர் நடிகைகள் மட்டுமல்லாது ரசிகர்களும் வாழுத்துக்களை தெரிவித்தனர். அப்போது பாலகிருஷ்ணாவில் 107-வது படத்தை தான் இயக்க இருப்பதாக இயக்குநர் கோபிசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, பாலகிருஷ்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!
பாலகிருஷ்ணா தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவார் . ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க வேண்டாம் என்ற வேண்டுகோளினை விடுத்திருந்தார். இது குறித்து சமூக வலைத்தள பக்கங்களில் வேண்டுகோள் மடல் ஒன்றினையும் வெளியிட்டிருந்தார் . நந்தமுரி பாலகிருஷ்ணா தற்பொழுது போயபதி சீனு இயக்கத்தில் ”அகண்டா” என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.