Watch Video: கடைசி செக்ஸ் எப்போ? எங்க? கரணின் கேள்வியும்.. விஜய் தேவரகொண்டா சொன்ன டெரர் பதிலும்.. வைரலாகும் ப்ரோமோ!
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின் ‘காஃபி வித் கரண்’(Koffee with Karan) மிகவும் பிரபலமானது.
![Watch Video: கடைசி செக்ஸ் எப்போ? எங்க? கரணின் கேள்வியும்.. விஜய் தேவரகொண்டா சொன்ன டெரர் பதிலும்.. வைரலாகும் ப்ரோமோ! Koffee With Karan S7 Ep 4 Vijay Deverakonda, Ananya Panday talk about sex life, dating Watch Video Watch Video: கடைசி செக்ஸ் எப்போ? எங்க? கரணின் கேள்வியும்.. விஜய் தேவரகொண்டா சொன்ன டெரர் பதிலும்.. வைரலாகும் ப்ரோமோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/27/05d0ba3c1455a72f3e310ba0c59758461658890755_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேயின் நடிப்பில் உருவாகியுள்ள லிகர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் படத்துக்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக காபி வித் கரண் நிகழ்ச்சியிலும் விஜய் தேவரகொண்ட மற்றும் அனன்யா கலந்துகொண்டனர். அதன் ப்ரோமா தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காபி வித் கரண்
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின் ‘காஃபி வித் கரண்’(Koffee with Karan) மிகவும் பிரபலமானது. சினிமா பிரபலங்களின் பர்சனல் பக்கங்கள் தொடர்பான ரூமர்ஸ் , அந்தரங்க விஷயங்களை கரண் ஜோகர் வெளிப்படையாக கேட்டு விடுவதும் அதற்கு பிரபலங்கள் கொடுக்கும் பதில்களும்தான் ஷோவின் வெற்றிக்கு காரணம். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன் தற்போது தொடங்கியுள்ளது.ஏற்கெனவே சமந்தாவை அமரவைத்து அவரது தனிப்பட்ட விஷயங்களை கரண் பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சர்ச்சைதான் முதலீடு என தொடரும் கரண் அடுத்து விஜய் தேவரகொண்டாவை வைத்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
Serious question - do you like 🧀? Then you'll love Episode 4 of #HotstarSpecials #KoffeeWithKaranS7, streams from this Thursday only on Disney+ Hotstar.@DisneyPlusHS @TheDeverakonda @ananyapandayy @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/omxqi1NyBO
— Karan Johar (@karanjohar) July 26, 2022
விஜய் தேவரகொண்டா கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமாவில் வழக்கமான கலகல கேள்விகளை கேட்கும் கரண், கடைசியாக எப்போது உடலுறவு செய்தீர்கள் என்ற கேள்வியை கேட்கிறார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளிக்கும் விஜய் தேவரகொண்டா, இது வேண்டாமே என்கிறார். பின்னர் அடுத்தடுத்து கட் செய்யப்படும் காட்சிகளில் விஜய் தேவரகொண்டா கார் என பதிலளிக்கிறார். அதற்கு கரணும், அனன்யாவும் ஆச்சரியமடைகின்றனர். பின்னர் காரில் மூவர் இருந்தார்களா என்கிறார் கரண். அதற்கு பதிலளிக்கும் தேவரகொண்டா இல்லை என்கிறார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைப்பதற்காக இந்த ப்ரோமா உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி உடலுறவு என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா சொன்ன பதில் என்னவென்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றே தெரியவரும்.
சினிமா ரசிகர்கள் லிகர் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். “ஐ ஸ்மார்ட் சங்கர்”, “போக்கிரி” ஆகிய மாஸ் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், லிகர் படத்தின் இயக்குநர் ஆவார். லாக்டவுன் காரணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இன்று வெளியான ட்ரைலர் காட்சிகளில், விஜய் தேவரகொண்டா, பேச்சு குறைபாடுள்ளவர் மற்றும் பல கேங்க்ஸ்டர் சண்டைகளில் சிக்கி வரும் ஒரு கிக்பாக்ஸராக காண்பிக்கப்படுகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இவரது ஜோடியாகவும், நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாகவும் நடித்துள்ளனர்.
லிகர் படத்தின் ஹைலைட்டே, மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான்.மைக் டைசன் இதற்கு முன்பாக, ஹாங் ஹோவர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் கதைகளமானது, விஜய் தேவர்கொண்டா ஒரு டீ கடை வியாபாரியாக இருந்து, இந்தியன் பாக்ஸராக MMA பட்டத்தை எப்படி வென்று காட்டுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)