Rajinikanth Onscreen Heroines: சூப்பர் ஸ்டாருடன் அதிகமாக டூயட் பாடிய நடிகை இவரா? இவ்வளவு பெரிய லிஸ்ட்டா!
Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக அதிக படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) தன்னுடைய திரைப்பயணத்தில் ஏராளமான ஹீரோயின்களுடன் நடித்துள்ளார். அந்த வகையில் அவருடன் அதிகமாக திரையைப் பகிர்ந்த சில ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா?
ஸ்ரீபிரியா :
70 - 80'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு டாப்பில் இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 18 படங்களிலாவது நடித்துவிடுவார். அந்த அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா தான் சூப்பர் ஸ்டாருடன் அதிக அளவிலான படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ஹீரோவாக அறிமுகமான 'பைரவி' படம் தொடங்கி ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, மாங்குடி மைனர், பொல்லாதவன், பில்லா என ரஜினிகாந்துடன் 28 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
ஸ்ரீதேவி :
தமிழ் சினிமாவின் மயில் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவியின் ஆல் டைம் பேவரட் படமான 'செந்தூரப் பூவே ' படத்தில் ஸ்ரீதேவி மீது ஆசைப்படும் ரௌடி கதாபாத்திரம் முதல், மூன்று முடிச்சு, ஜானி, அடுத்த வாரிசு, கவிக்குயில், தர்மயுத்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தார் ரஜினிகாந்த். மொத்தம் 4 மொழிகளில் ரஜினி - ஸ்ரீதேவி இருவரும் 22 படங்களில் நடித்துள்ளார்கள்.
ராதிகா :
தமிழ் திரையுலகில் மிகவும் துணிச்சலான ஒரு நடிகையான நடிகை ராதிகாவுடன் இணைந்து போக்கிரி ராஜா, ரங்கா, மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் அந்த ஜோடி திரையில் மேஜிக் செய்தனர். இருவரும் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 9 படங்களில் நடித்துள்ளனர்.
குஷ்பூ :
90'ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகை அதிகமாக ஆதிக்கம் செய்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, பாண்டியன், மன்னன் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து இருந்தார் குஷ்பூ.
மீனா :
'ரஜினி அங்கிள்' என குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்துடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த நடிகை மீனா பிற்காலத்தில், எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் ஜோடியாக டூயட் பாடியிருந்தார். ரஜினியின் 'எங்கேயோ கேட்ட குரல்' படத்திலும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலா :
மிகவும் க்யூட்டான நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அமலா. மாப்பிள்ளை, கொடி பறக்குது, வேலைக்காரன், சிவா உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்தார்.
அம்பிகா :
நடிகை அம்பிகாவுடன் இணைந்து மிஸ்டர் பாரத், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், மாவீரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
இவர்களை தவிர ஜெயப்பிரதா, மஞ்சுளா, ஜெயா பாரதி, சுஜாதா, ஷோபா, சீமா, ரதி சுமலதா, அம்பிகா, சரிதா, மாதவி, ராதா, ஷோபனா, கௌதமி, ரேவதி, ரேகா, பானுப்ரியா, ரோஜா, நக்மா, ஐஸ்வர்யா ராய், ஈஸ்வரி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா ஸ்ரேயா, நயன்தாரா, சிம்ரன், அனுஷ்கா என அவர் ஜோடி சேர்ந்து நடித்த ஹீரோயின்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.