மேலும் அறிய

HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே” - பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று...!

HBD Kiran Rathod : முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண் ராத்தோட் பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவில் வட நாட்டு நடிகைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் இருக்கும். அப்படி வடநாட்டு பெண் கதாபாத்திரத்திலேயே முதல் படத்தில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண் ராத்தோட் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே”  - பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று...!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்று மிகவும் பிஸியாக பிரஷாந்த், விக்ரம், அஜித், கமல், மாதவன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக கலக்கியவர். 2022ம் ஆண்டு வெளியான 'ஜெமினி' படத்தில் மனிஷா என்ற கேரக்டரில் நார்த் இந்தியன் பெண்ணாக சுட்டி தனமாக நடித்த கிரண் அனைவரையும் கவர்ந்து இழுத்து ஓ போட வைத்தார். முதல் படமே அடி தூள் ரகமாக இருந்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் கிரணை தேடி வந்து குவிந்தன. 

2002ம் ஆண்டு நடிகர் அஜித் ஜோடியாக 'வில்லன்' திரைப்படத்தில் கொஞ்சம் அதிரடியான பெண்ணாக நடித்திருந்தார். லீட் ஹீரோயினாக கிரண் நடிக்க மீனா செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த அளவுக்கு கோலிவுட்டின் உச்சபட்ச நடிகையாக இருந்தார். அடுத்ததாக 'அன்பே சிவம்' படத்தில் பாலா சரஸ்வதியாக மிகவும் அமைதியான ஒரு கேரக்டரில் வெரைட்டி காட்டினார். பாலாவாக கமலின் காதலியாகவும், சரஸ்வதியாக நடிகர் மாதவனை திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்ணாகவும் நடித்திருந்தார். 

HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே”  - பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று...!

'வின்னர்' படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நீலவேணி கேரக்டரில் கிரண்  காட்டிய ரவுசு அனைவரையும் கவர்ந்தது. 2003ம் ஆண்டில் மட்டுமே கிரண் நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியாகும் அளவுக்கு டாப் இடத்தில் இருந்தார். ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்த கிரண் காலப்போக்கில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். திருமலை படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட கிரண் மார்க்கெட் அதற்கு பிறகு சரிய  துவங்கியது. ஒரு காலகட்டத்தில் அடுத்த குஷ்பூ என்றெல்லாம் கொண்டாடப்பட்ட கிரண் கோலிவுட்டில் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

படிப்படியாக வாய்ப்புகள் குறையவே சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார் கிரண். அவரின் உடல் எடை கிடுகிடுவென உயர்ந்ததே கோலிவுட் அவரை ஒதுக்க காரணமாக கூறப்பட்டது. இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக எடையை குறைக்க முயற்சி எடுத்து வருகிறார் கிரண். 

சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் கிரண் வைரலாகும்  வகையில் அடிக்கடி புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். கிரண் தன்னுடைய பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி அதன் புகைப்படங்களை சோசியல்  மீடியாவில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கிரண் பர்த்டே ஸ்பெஷல் என்னவாக இருக்குமே என மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரின் தீவிர சோசியல் மீடியா பாலோவர்ஸ். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Embed widget