Khushbu Sundar : சுந்தர் பத்தி வதந்திகள் வரும்.. ஆனா.. Personal பக்கங்கள் பகிர்ந்த குஷ்பு..
"நாங்க எந்த எதிர்பார்ப்புமே வச்சுக்கிறது இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் செய்வதை காதலுடன் செய்வோம்."
கோலிவுட்டில் விரல் விட்டு என்னும் தம்பதிகள்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நிலைத்து நிற்க முடிகிறது. இது தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்தது என்றாலும் கூட , பிரபலங்கள் என்றால் சற்று கூர்ந்து கவனிக்கப்படுவது இயல்புதானே. அந்த வகையில் பலருக்கும் ஃபேவரெட்டான ஜோடியாக இருப்பவர்கள் குஷ்பு - சுந்தர். சி ஜோடிதான். இருவரின் விருப்பமும் , குணமும் வேறு மாதிரியாக இருந்தாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் குஷ்பு.
View this post on Instagram
குஷ்பு கூறியதாவது :
”திருமண வாழ்க்கை என்பது perfection கிடையாது.நாங்க பிரபலங்களாக இருக்குறதால பூதக்கண்ணாடி வச்சு பார்ப்பாங்க. எனது கணவருக்கு privacy ரொம்ப முக்கியம். அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும் என்றாலே கதவை சாத்திக்கொண்டு , காய்ச்சல் அடிக்குதுனு சொல்லி படுத்துடுவாரு. அந்த மாதிரியான ஆள். ஆனால் நான் அவருக்கு அப்படியே நேரானவள்.நான் ரொம்ப ரொமாண்டிக்கான ஆள், அவருக்கு ரொமாண்டிக்கோட முதல் எழுத்து கூட தெரியாது.
கேண்டில் லைட் டின்னர் போகலாம்னு சொன்னா. முகமே தெரியாது..யாரை பார்த்து பேசுறதுனு சொல்லுவாரு.அப்படித்தான் அவரு. அவருக்கு பீச்ல மல்லிகைப்பூ வாங்கி கொடுக்கனும் , சுண்டல் சாப்பிடனும்.. அதுதான் அவரின் சின்ன சின்ன ஆசை. இதுல எதுவுமே நடக்காது ஏன்னா எனக்கு மல்லிகைப்பூ அலர்ஜி, இரண்டு பேரும் பீச்ல உக்கார முடியாது. நாங்க எந்த எதிர்பார்ப்புமே வச்சுக்கிறது இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் செய்வதை காதலுடன் செய்வோம். அவர் யாராவது பக்கத்துல வந்தா ரொம்ப கூச்சப்படுவார். இவ்வளவு ஏன் பொது இடத்துல பொண்டாட்டி கைய கூட பிடிக்க மாட்டாரு.
மகள்கள் இருப்பதால அவர் ரொம்பவே கவனமா மற்ற பெண்களிடம் பேசுவாரு.அவர் குறித்து வரும் வதந்திகளுக்கு நான் எப்போதுமே செவி கொடுத்தது இல்லை. ஏன்னா அவரை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்” என தனது திருமண வாழ்க்கையை பகிர்ந்தார் குஷ்பு.