Yash Viral Video: ‛பெரியம்மாவும் இல்ல... பெரியப்பாவும் இல்ல...’ பப்ஜி ப்ளேயராக மாறிய ராக்கி பாய் யஷ்!
ஹாலிவுட்டுக்கு போகிறாரா ராக்கி பாய், லாஸ் ஏஞ்சலஸில் துப்பாக்கி பயிற்ச்சியில் ஈடுபட்ட நடிகர் யஷ்ஷின் வைரல் வீடியோ..!
கே.ஜி.எஃப் படத்தில் திரையை கிழிக்கவிட்ட யஷ் தற்போது துப்பாக்கியும் கையுமாக பப்ஜி ப்ளேயர் போல் ஒரு வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். கன்னட பட திரையுலகில் பல நடங்களில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த யஷ் ஆள் அடையாளம் இல்லாமல் இருந்தார். தமிழில் வெளியான களவானி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களின் கன்னட ரீமேக்கில் கதாநாயகராகவும் நடித்தவர் இவர். பின்னர், பிரசாந்த் நீலின் இயக்கத்தில் கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் சூப்பராக நடித்து, யஷ்ஷின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
பின்னர் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக பெரும் எதிர்ப்பார்ப்புக்கள் நிலவு வந்தது. எதிர்ப்பார்ப்பை விஞ்சும் வகையில் யஷ்ஷின் நடிப்பு மிரட்டளாக இருந்தது. சரி, கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்துடன் ராக்கி பாயின் கதை முடிந்தது என மக்கள் நினைத்த நிலையில், படக்குழுவினர் மூன்றாம் பாகத்தின் ஹிண்ட் கொடுத்து, படம் பார்க்க வந்தவர்களுக்கு அதிர்ச்சியை பரிசாக கொடுத்தனர்.
View this post on Instagram
கே.ஜி.எஃப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் , புல்லரித்து கொண்டிருக்கிறது. இன்றும் கூட அந்த கேஜிஎஃப் ஃபீவர் குறையவில்லை. இந்த நிலையில், நடிகர் யஷ் அவரின் சோஷியல் மீடியா பக்கங்களில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துப்பாக்கியும் கையுமாக காணப்படும் இவர் பப்ஜி ப்ளேயர் போல துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் நடைபெற்றுள்ளது.
அந்த வீடியோவில், “ இலக்கை அடைய நிச்சயமாக ஒரு வழி உண்டு, ஆனால் அந்த வழியை தேடுவதுதான் சவால்! சூப்பரான நாளை அமைத்து கொடுத்த ஜே ஜே பெரிக்கி நன்றி. அடுத்த முறை கலாஷ்நிக்காவ்தான்!” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Preparation started 🎉
— Abhishek Rocky 😎 (@Abhishe76031154) September 29, 2022
" World is Yash Territory " #GlobalStarYash #YashInLA @TheNameIsYash pic.twitter.com/JvmRFr3NBL
ஜே ஜே பெரி என்பவர் ஹாலிவுட்டின் பெயர் போன ஸ்டண்ட் இயக்குநர் ஆவார். அவரிடம் ஷூட்டிங் பயிற்சியை யஷ் மேற்கொண்டதால், யஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என்று வதந்தி பரவி வருகிறது. இப்போதும் கே.ஜி.எஃப் படத்தின் லுக்குடன் யஷ் காட்சி அளிக்கிறார். அவரின் முரட்டு தாடியையும் நீண்ட தலை முடியையும் சவரம் செய்யாமல் இருக்கிறார். இதனால், இவர் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்கு ஆயத்தமாகிறார் என்றும் பலர் கூறிவருகின்றனர்.