Watch Video: தசரா பட ப்ரொமோஷன்.. பாட்டிலை கையில் எடுக்காமல் குடித்து அசத்திய கீர்த்தி சுரேஷ்...
நடிகை கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் ரிலீசாக உள்ளது.
நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’தசரா’ படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா’. நடிகை கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாக உள்ளது.
பிரகாஷ் ராஜ், மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ, சமுத்திரக்கனி, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீரியட் ஆக்ஷன் படமாகவும் தெலங்கானா மாநிலம், கோதாவர்கினி நிலக்கரி சுரங்கத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
புஷ்பா, கேஜிஎஃப் படங்களின் கதைக்களத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நானி இந்தப் படத்தில் பக்கா ஆக்ஷனில் களமிறங்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், பட ரிலீசுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் முன்னதாக தசரா பட ப்ரோமோஷன் பணிகளின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைகளைப் பயன்படுத்தாமல் பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தசரா ப்ரொமோஷன் பணிகளின் போது நடிகர் நானி, நடிகர் ராணா டகுபதி ஆகியோருடன் உடன் இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷின் இந்த ஜாலியான ‘பாட்டம்ஸ் அப்’ (bottom's up) வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
ఎత్తిన సీసా దించకుండా తాగేసిన మహానటి
— ABP Desam (@ABPDesam) March 23, 2023
#keerthysuresh #nani #dasara #dasaramovie pic.twitter.com/i8MCE8n22x
முன்னதாக தசரா படத்தின் முதல் வீடியோ பாடலான ’தூம் தாம் கூத்து’ பாடல் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளன.
மேலும் படிக்க: K.E. Gnanavelraja : சூர்யாவிடம் உண்மையை மறைத்துவிட்டோம்! ராஜமௌலிக்குத்தான் அனைத்து பெருமையும்... உண்மையை உடைத்த ஞானவேல்