"சமைக்கிறத விட சாப்பிடுறது கஷ்டம்.. எப்படி சாப்பிடணும் தெரியுமா?" - ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம் சத்யா (சாப்பாடு) எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
'பைலட்ஸ்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ஒரு சில மலையாள படங்களில் நடித்துவந்த இவர், இது என்ன மாயம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து அவரது இரண்டாவது படமே சிவகார்த்தியேகனுடன் அமைந்தது. பிறகு இவரது நடிப்பு பேசப்பட்டதால் வரிசையாக கோலிவுட் சினிமா இவருக்கு சிகப்பு கம்பளத்தை விரித்தது.
இதனையொட்டி தனுஷ், விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தினார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த மகாநடி என்னும் நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வாய்ப்பை இவரது கரியரில் ஏற்படுத்தியது. படத்தில் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே சொல்லாம். அதனால்தான் அவருக்கு இந்த படத்திற்காக ஏகப்பட்ட விருதுகள் குவிந்தன. கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்து முடிந்து ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டது.
இதனையொட்டி அவர், பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் எப்படி ஒணம் சத்யா சாப்பிட வேண்டும் என்பது குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார். அழகாக ஒணம் புடவை அணிந்து வந்த கீர்த்தி சுரேஷ் தொகுப்பாளராகவே மாறி வீடியோவில் பேசி இருக்கிறார்.
அதில், நேந்திரம் சிப்ஸில் ஆரம்பித்து, இறுதியாக இனிப்புடன் உணவை முடிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அன்போடு சொல்லிக் கொடுக்கிறார். சமைப்பதை விட சாப்பிடுவது தான் சிரமம் என கீர்த்தி கூறுவார். அது மட்டுமின்றி இடையிடையே அவர் செய்யும் ப்ளூப்பர் காட்சிகளும் அதில் இடம் பெற்று இருக்கிறது.
View this post on Instagram
கீர்த்தி சுரேஷ் நடிப்பது மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி, காந்தி தத் ஆகியோருடன் இணைந்து சரும பராமரிப்பு பொருள்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். பூமித்ரா என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சரும பராமரிப்பு தயாரிப்பு நிறுவனத்தில் தயாராகும் இந்த பொருள்கள் சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படத்தின் முழு படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.