Kavin Marriage Photos: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே... கவின் - மோனிகாவின் க்யூட் திருமண புகைப்படங்கள்!
நடிகர் கவினுக்கு அவரின் நீண்ட நாள் காதலியான மோனிகாவுடன் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
![Kavin Marriage Photos: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே... கவின் - மோனிகாவின் க்யூட் திருமண புகைப்படங்கள்! Kavin Marriage Photos DADA Actor Kavin Monicka David Wedding First Pics Husband Wife Check Out Pictures Kavin Marriage Photos: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே... கவின் - மோனிகாவின் க்யூட் திருமண புகைப்படங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/968eff472599bbfb22c3cfc3542207c01692523279590571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகி கலக்கி வருபவர் கவின். இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போகிறார் என தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அதன்படி, இன்று காலை கவின் - மோனிகா திருமணம் விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
‘கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கவின், அதனைத் தொடர்ந்து பிரபல சரவணன் மீனாட்சி தொடரில், வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பின்னர், இயக்குநர் நெல்சனிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். 2019 -ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கவின். இப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் கவின். அங்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று வாராவாரம் ஓட்டெடுப்பில் முன்னேறி வந்தார். எனினும் நிகழ்ச்சியை விட்டு பணப்பெட்டியுடன் வெளியேறி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடித்த ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது கவினுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுத் தந்தது. கவினின் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு இயக்கிய 'டாடா' படத்தில் நடித்தார்.
இப்படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் கவினின் நடிப்பு பாராட்டை பெற்றது. தற்போது கவின் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை இன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி, அவர்களது திருமணம் இன்று நடந்து முடிந்தது. பிரபல காமெடி நடிகரான புகழ் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவினை திருமணம் செய்துள்ள மோனிகா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)