Kasadathabara: ஒடிடியில் வெளியாகும் மற்றுமொரு ஆந்தாலஜி ! டீசரே மாஸா இருக்கே !
நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறது இரண்டு அறிவியல் கோட்பாடுகள்தான் என கௌதம் வாசுதேவ் மேனன் குரலில் ஒலிக்கிறது இந்த டீசர்
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘புலி’ திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் கசட தபற. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த ஆந்தாலஜியில் மொத்தம் ஆறு குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை சிம்புதேவன் மட்டுமே இயக்கியுள்ளார். கசட தபற ஆந்தாலஜியில் வெங்கட் பிரபு, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி,பிரேம்ஜி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கல் நடித்துள்ளனர். கசட தபற ஆந்தாலஜிக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.
Happy to launch the #KasadatabaraTeaser - https://t.co/LB08XFDBhU
— VijaySethupathi (@VijaySethuOffl) August 16, 2021
Congrats @vp_offl @chimbu_devan @tridentartsoffl and Team Kasadatabara 👍🏽#KasadatabaraOnSonyliv from aug27@SonyLiv @Muzik247in
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ‘கசட தபற ‘ ஆந்தாலஜி’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தார்.நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறது இரண்டு அறிவியல் கோட்பாடுகள்தான் என கௌதம் வாசுதேவ் மேனன் குரலில் ஒலிக்கிறது இந்த டீசர். அடுத்தடுத்த காட்சி விளக்கங்களில் “இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும் தப்பு பண்ணாம மாட்றவங்களும் இருக்கத்தான் செய்வாங்க “ அதேபோல “இந்த ஊர்ல திறமையில்லாத பணக்காரர்களுக்கு கிடக்கிற வாய்ப்பு திறமையான ஏழைகளுக்கு கிடைக்கிறதில்லை” போன்வை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பல சுவாரஸ்ய காட்சிகளின் தொகுப்பாக கசட தபற இடம்பெறும் என்பது டீசர் மூலம் புலப்படுகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Our heartfelt thanks to all friends and fans who watched our #KasadatabaraTeaser and appreciated it.🙏🙏🙏@vp_offl @tridentartsoffl @Muzik247in @sundeepkishan @iamharishkalyan @ReginaCassandra @priya_Bshankar
— Chimbu Deven (@chimbu_deven) August 17, 2021
streaming on @SonyLIV from aug27th!!👍👍👍
https://t.co/BNeTYQ1eCK
#KasadatabaraTeaser - https://t.co/kyg3hl30iT Very interestingly put together with two theories colliding together and bringing us six stories. Innovative storyteller @chimbu_deven ready with another treat. #kasadatabaraOnSonyliv
— Siddarth Srinivas (@sidhuwrites) August 16, 2021
இதற்கு முன்னதாக ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியானது. இந்த ஆந்தாலஜினின் ஒவ்வொரு குறும்படத்தையும் ஒவ்வொரு இயக்குநர் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.