மேலும் அறிய

Karumegangal Kalaiginrana: கமல் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியாகும் தங்கர்பச்சான் படம்..!

பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இயக்குநர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால் மக்களை கவர்ந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் என அவரின் பல படைப்புகள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திய தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கியுள்ளார். 

பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். VAU Media  சார்பில் துரை வீரசக்தி கருமேகங்கள் கலைகின்றன படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். 

கருமேகங்கள் கலைகின்றன படம் பற்றி இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளியான பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை என கூறினார்.  மேலும் இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யமாக அமைந்தது. 

இதனைப் பார்க்கும் போது இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் எனவும் தெரிவித்தார்.  தொடர்ந்து இயக்குநர் தங்கர்பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மண்சார்ந்த  படைப்பாக உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget