"100 தல ராவணன்" - வெளியானது கார்த்திக்கின் சுல்தான் ட்ரைலர்..
100 சகோதரர்களை கொண்ட நாயகனுக்கும், அதற்கு நிகரான ஆள்பலம் கொண்ட வில்லனுக்கும் நடக்கும் சுவாரசியமான கதைக்களம்..
பிரபல நடிகர் கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்தான் சுல்தான். Dream Warrior Pictures தயாரிப்பு நிறுவனம் சார்பாக இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். முதல்முறையாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் திரையுலகில் களமிறங்க, KGF சாப்டர் 1 படத்தில் கருடனாக தோன்றி அசத்திய நடிகர் ராமச்சந்திர ராஜு வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தமிழில் இதுதான் அவருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த நடிகர்கள் நெப்போலியன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நாயகன் யோகி பாபுவும் இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து காமெடியில் அசத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் படக்குழு அறிவித்ததை போல நேற்று மாலை இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

Dedicating #Sulthan trailer to all my fans who have been cheering and supporting me all the time. Love you all! Here it is!#SulthanTrailer - https://t.co/Twam1DKN6q #SulthanFromApril2
— Actor Karthi (@Karthi_Offl) March 24, 2021

100 சகோதரர்களை கொண்ட நாயகனுக்கும், அதற்கு நிகரான ஆள்பலம் கொண்ட வில்லனுக்கும் நடக்கும் சுவாரசியமான கதைக்களம் கொண்ட படமாக சுல்தான் வெளிவரவுள்ளது. வரவிருக்கும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சுல்தான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.