Sardar Trailer : பிரபல மாலில் நடைபெறும் சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழா
Sardar Trailer : கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை துவங்கவுள்ளது

சர்தார் படக்குழு, வடபழனியில் உள்ள பிரபல மாலில் படத்தின் ட்ரைலரை இன்று மாலை வெளியிடவுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வந்த திரைப்படம் "சர்தார்". கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சூர்யா வெளியிட்ட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் உறுதிப்படுத்தினர்.
சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி அன்று வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என்றும் இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தினர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
View this post on Instagram
அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் இன்று மாலை 7 மணிக்கு, சர்தார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா துவங்கவுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில், 7 மணி என்ற நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த ட்ரைலர் வெளியாக சற்று நேரம் ஆகலாம். கார்த்தி மற்றும் சர்தார் படக்குழுவினரை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் இன்று விஜயா ஃபாரம் மாலுக்கு சென்று அவர்களை பார்க்கலாம்!
இதற்கு முன்னதாக, கார்த்தி பாடிய “ஏறுமயிலேறி” என்ற பாடல் வெளியானது. நடிகர் கார்த்தி பாடிய முதல் பாடல் இதுவே. இந்த பாடலை கேட்கும் போது வேறு ஒருவரின் குரலை கேட்பது போல் இருந்தது. நடிகர் கார்த்தி, அவரின் சொந்த குரலை மாற்றி வித்தியாசமாகவும் நாட்டு புற பாடலிற்கு ஏற்ற பாணியை உள்வாங்கி உற்சாகத்துடன் பாடி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Friday Movie Releases: வாங்குற சம்பளம் சினிமாவுக்கே போயிரும் போலயே ..இன்னைக்கு மட்டும் 61 படம் ரிலீஸ்..!





















