Karthi Arvind Swamy Movie: கார்த்தியின் அடுத்த படம் “மெய்யழகன்”.. வெளியான சூப்பர் அப்டேட்!
Karthi Next Movie: கார்த்தியின் 27ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை பிரேம் குமார் இயக்குகிறார்.
96 இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் 27ஆவது படம்
நடிகர் கார்த்தியின் 27ஆவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அரவிந்த் சாமி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா, சீரியல் நடிகை சுவாதி ஆகியோர் நடிப்பதாகவும் படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
தீபாவளிக்கு இப்படம் வெளியவாதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ எனப் பெயரிடப்பட்டு தற்போது தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த் சாமியுடன் கார்த்தி ஜாலியாக சைக்கிளில் பயணிக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.
One from our Hearts..! #Meiyazhagan #மெய்யழகன் @Karthi_Offl #Arvindswamy #PremKumar #Jyotika #GovindVasantha @SDsridivya @rajsekarpandian @2D_ENTPVTLTD @SakthiFilmFctry pic.twitter.com/yxee04Bq8D
— Suriya Sivakumar (@Suriya_offl) May 24, 2024
தோல்வியடைந்த முந்தைய படம்
கடந்த ஆண்டு கார்த்தியின் 25ஆவது படமாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து கார்த்தியின் 26 மற்றும் 27ஆவது படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாகின.
அதன்படி 26ஆவது திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்க, 27ஆவது படத்தை விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்த வெற்றிப் படமான 96 படத்தை எடுத்த பிரேம் குமார் இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
குடும்ப செண்டிமெண்ட்
தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் சென்ற ஆண்டு தொடங்கிய நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து, ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான விருமன் படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் குடும்ப செண்டிமெண்ட் படம் இது என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், கோவிந்த் வசந்தா இப்படத்தில் இசையமைப்பாளராகவும், பி.சி.ஸ்ரீராம் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொருபுறம் கார்த்தியின் 26ஆவது படமான நலன் குமாரசாமி இயக்கும் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வில்லனாக நடிகர் சத்யராஜ் கார்த்தி உடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!