வாட்ஸ் அப் குழுவில் நுழைய முயன்ற ரன்பிர் - ஆலியா.. மறுத்த கரண் ஜோஹர்.. என்ன காரணம்?
கரண் ஜோஹர், தன் வாட்சாப் குழுவில் நுழைவதற்கு நடிகர்கள் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோர் இடம்பெறுவதற்கு முயற்சிகள் எடுத்ததாகவும், மற்றொரு இயக்குநரான அயான் முகர்ஜி அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இந்தி மொழி திரைத்துறை வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவர். குச் குச் ஹோதா ஹை, மை நேம் இஸ் கான், ஏ தில் ஹே முஷ்கில் முதலான திரைப்படங்களின் மூலமாக தனது முத்திரையைப் பதித்தவர் கரண் ஜோஹர். சமீபத்தில் யூட்யூப் தளத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கரண் ஜோஹர், தன்னிடம் வாட்ஸ் அப் குழு ஒன்று இருப்பதாகவும், அதனுள் நுழைவதற்கு பாலிவுட் நடிகர்கள் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோர் இடம்பெறுவதற்கு கடும் முயற்சிகள் எடுத்ததாகவும், மற்றொரு இயக்குநரான அயான் முகர்ஜி அவர்களை அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
`A List' என்ற பெயரில் ஆங்கில எழுத்தான Aவில் தொடங்கும் பெயர்களைக் கொண்டோர் இடம்பெற்றிருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றை வைத்திருக்கிறோம். தயாரிப்பு வடிவமைப்பாளர் அம்ரிதா அதில் இருக்கிறார். இயக்குநர் அயான் முகர்ஜி இருக்கிறார். இந்தக் குழுவில் திரைப்பட ட்ரைலர்களைப் பற்றி உரையாடுவோம். `2 ஸ்டேட்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷேக் வர்மன் புதிய திரைப்படங்களின் ட்ரைலர்களை அந்தக் குழுவில் பதிவிடுவார். நாங்கள் அனைவரும் அதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்போம்’ எனக் கூறியுள்ளார் இயக்குநர் கரண் ஜோஹர்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்து எதனையும் ஃபார்வேர்ட் செய்ய முடியாது எனவும், இது மிகவும் தனிப்பட்ட முறையிலான விமர்சன உரையாடல்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் கரண் ஜோஹர், `ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகிய இருவரும் இந்தக் குழுவில் இடம்பெற முயன்றார்கள். ஆனால் அயான் முகர்ஜி இருவரையும் அனுமதிக்கவில்லை. அவர்களின் திரைப்படங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நாங்கள் கொண்டிருக்கலாம் என்பதால் திரைப்பட நடிகர்களை அனுமதிப்பதில்லை. மேலும், எங்கள் விமர்சனங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
தற்போது இயக்குநர் கரண் ஜோஹர், `ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். `கல்லி பாய்’ திரைப்படத்தில் நடித்த ரன்வீர் சிங், ஆலியா பட் ஜோடி இந்தத் திரைப்படத்தில் மீண்டும் முன்னணி நடிகர்களாக இணைவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மேலும், நீண்ட கால காதல் ஜோடியான நடிகர்கள் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு, குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் சூழ திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணப் படங்களும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருந்தன.