Rukmini Vasanth: ஒரே ஒரு புகைப்படம்...கயாடு லோகரை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா ருக்மணி! அப்படி என்ன புகைப்படம்?
Rukmini Vasanth: அண்மையில் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நடிகை கயாடு லோகரை தொடர்ந்து இப்போது நடிகை ருக்மணி வசந்த் சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

தாங்கள் நடித்த திரைப்படங்களில் பிரபலமாவதை விட ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மூலம் ஒரே நாளில் பிரபலமாகிவிடுவார்கள். அந்த வகையில் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விடுவார்கள். அப்படித்தான் தற்போது அண்மையில் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நடிகை கயாடு லோகரை தொடர்ந்து இப்போது நடிகை ருக்மணி வசந்த் சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
காந்தாரா அத்தியாயம் 1:
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் காந்தாரா சேப்டர் 1. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்களுகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயராமன், நடிகைகள் சப்தாமி கவுடா, ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இச்சூழலில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 22) வெளியானது. ட்ரெய்லரே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஒரே போட்டோவில் வைரலான ருக்மணி:
அந்த வகையில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த நடிகை ருக்மணி வசந்த் தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் படி தான் ஆடை அணிந்து வந்திருப்பார் ருக்மணி வசந்த். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
கயாடு லோகரை பின்னுக்கு தள்ளினார்:
அண்மைக்காலமாக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கயாடு லோகர். இவர் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான டிராகன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்திருந்தார்.
அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்ப நாயாகிகள் பட்டியில் இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் தற்போது கயாடு லோகரை பின்னுக்குத்தள்ளி ஒரே புகைப்படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து உள்ளார் நடிகை ருக்மணி வசந்த்.
யார் இந்த ருக்மணி வசந்த்?
நடிகை ருக்மணி வசந்த் பெங்களூரைவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராணுவ அதிகாரி. தயார் பரத நாட்டிய கலைஞர். மாடலிங் துறையில் இருந்த இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தில் சினிமாத்துறைக்கு உள்ளே வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் நடித்த இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















