மேலும் அறிய
கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் - இயக்குநர் அமீர்
இப்போது எல்லோரும் நடிக்கிறார்கள். சூரி கதாநாயகனாகவும், பலர் கதைநாயகனாக நடிக்கிறார்கள் இதையெல்லாம் வரவேற்க வேண்டும் - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்
Source : whats app
கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் - அவர் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை, குறைத்து மதிப்பிடவும் இல்லை - திரைப்பட இயக்குநர் அமீர் மதுரையில் பேட்டி.
தக் லைஃப் திரைப்படம்
நாயகன் படத்தைத் தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது தக் லைஃப் திரைப்படம்
திரைப்பட இயக்குநர் அமீர்
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள குரு திரையரங்கில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல் ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்பட இயக்குநர் அமீர் பார்க்க வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எனது முதல் படமான மௌனம் பேசியதே படத்திற்கு மணிரத்னம், கமல் சாரும் வந்தனர். நாயகன் படத்தை எப்படி கல்லூரி காலத்தில் ஒரு ரசிகனாக பார்க்க முதல்நாள் வந்தேனோ அதுபோல தக்லைப் படத்தை ஒரு ரசிகனாக பார்க்க வந்துள்ளேன்” என்றார்.
இதையெல்லாம் வரவேற்க வேண்டும்
கன்னடமொழி விவகாரம் குறித்த கேள்விக்கு...,” அது ஒரு தேவையில்லாத அரசியல். அவர் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை. கன்னடத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் கன்னட மொழி குறித்து இது தேவையில்லாதவை. முன்பெல்லாம் இவர்தான் நடிக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது எல்லோரும் நடிக்கிறார்கள். சூரி கதாநாயகனாகவும், பலர் கதைநாயகனாக நடிக்கிறார்கள் இதையெல்லாம் வரவேற்க வேண்டும்” எனப் பேசினார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















