பல் சிகிச்சைக்காக ஊசி! பரிதாபமாக மாறிய முகம் ! குறையாத வீக்கத்தால் குமுறிய நடிகை!
பல் சிகிச்சைக்கு சென்ற கன்னட நடிகை சுவாதிக்கு செலுத்தப்பட்ட ஊசியால் 20 நாட்களாக முகம் வீங்கிய நிலையில் இருப்பதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
கன்னட திரையுலகமான சாண்டல்வுட் திரையுலகத்தைச் சேர்ந்தவர் நடிகை சுவாதிசதீஷ். இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி. நகரில் வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.
இந்த நிலையில், சுவாதிக்கு கடந்த சில வாரங்களாக பல் வலி இருந்துள்ளது. இதன் காரணமாக, அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று பல் வலிக்கு சிகிச்சை எடுத்துள்ளார். அங்கிருந்த பல் மருத்துவர் மாத்திரைக்கு பதிலாக ஊசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில் சுவாதியும் ஊசி செலுத்திக்கொண்டார்.
ஊசியை செலுத்திய பிறகு சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் மெல்ல, மெல்ல வீங்கியுள்ளது. ஊசி செலுத்தியதால் முகம் வீங்கியுள்ளதாகவும் விரைவில் வீக்கம் வற்றி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தொடக்கத்தில் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கடந்த 20 நாட்கள் ஆகியும் சுவாதிக்கு முகத்தின் வீக்கம் குறையவில்லை.
மேலும் படிக்க : Veetla Vishesham Review: நடிப்பு ராட்சசி ஊர்வசி.. நக்கல் சத்யாராஜ்.. வீட்ல விசேஷம் படம் வொர்த்தா இல்லையா..?
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுவாதி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், வெளியில் எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த மருத்துவரோ விரைவில் வீக்கம் குறைந்துவிடும் என்று பதில் அளித்ததுடன், சுவாதியின் மற்ற கேள்விகளுக்கு அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால், சுவாதி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து சுவாதி சமூகவலைதளம் மூலமாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார். சுவாதியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. ரசிகர்கள் பலரும் சுவாதியின் நிலை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தக்க மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : யாரு சாமி நீ? 3 வார்த்தையில் ராஜினாமா! இணையத்தில் ஹிட் அடித்த ரெசிக்னேஷன் லெட்டர்!
மேலும் படிக்க : Mamanithan:’நீங்க நடிச்சா அப்பாவும் நானும் சேர்ந்து இசையமைப்போம்னு யுவன் சொன்னார்...’ - மாமனிதன் பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்