Arnold Surya: அர்னால்டின் ஃபேக் ஐடியில் ட்ரெண்டான சூர்யா புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..
நடிகர் சூர்யா தனது ஃபிட்னஸ் குருவான ஹாலிவுட் நடிகர் அர்னால்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் ஃபிட்டான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தனது ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில் மட்டுமில்லாமல் உடல் மொழி வழியாகவும் கதாபாத்திரத்திற்கு முழுமையான பங்களிப்பை செய்யக் கூடியவர். கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் ஃபிட்னஸில் சூர்யாவே வியந்து பார்க்கும் ஒருவர் என்றால் அது ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தான். ஒரு காலத்தில் ஃபேன்பாயாக அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட சூர்யா, இன்று தனது குருக்கு நிகராக உடலை ஃபிட்டாக வைத்துள்ளார்.
ஃபேன் பாயாக சூர்யா
Throwback meet with my friend @Suriya_offl pic.twitter.com/ws26KguSjs
— Arnold (@Schwarzenglor) August 22, 2023
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த ஐ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு நடிகராக வருகைத் தந்திருந்தார். அப்போது அவரது மிகப்பெரிய ரசிகரான நடிகர் சூர்யா ஃபிட்னஸ் குறித்து அர்னால்ட் எழுதிய புத்தகத்தில் அவரது கையெழுத்து பெற்று அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இன்று கிட்டதட்ட 9 ஆண்டு காலத்திற்குப் பிறகு தற்போது இந்தப் புகைப்படத்தை இணையதளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள். ஒரு பக்கம் இருவரின் புகைப்படமும் மறுபக்கம் கங்குவா திரைப்படத்திற்கு சூர்யா உடற்பயிற்சி செய்துவரும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்துப் இந்த 8 வருடங்களில் சூர்யாவின் வளர்ச்சியைப் புகழ்ந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. திஷா பதானி கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சூரரைப்போற்று கூட்டணி
தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தனது 43-வது படத்தை சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் ஜி வி பிரகாஷ் குமாருக்கு 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்
சூர்யாவில் ரசிகர்கள் மிக நீண்டகாலமாக காத்துக்கொண்டு வரும் படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டில் இருந்து தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் சூர்யா.
ரோலக்ஸ்
யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யா தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் மிக ஆர்வமாக கேட்டு வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து முழு படம் ஒன்றை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் இந்தப் படத்தின் கதையை கேட்டதாகவும் தனக்கு கதை பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார் சூர்யா. மேலும் லோகேஷ் கனகராஜ் தனது கனவுப்படமாக கருதி வரும் இரும்பு கை மாயாவி படமும் தொடங்க இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார் சூர்யா. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவருகிறார்கள்.