மேலும் அறிய

Indian 2: ரூ.30 கோடி செலவில் இந்தியன் 2 படப் பாடல்.. கமல்ஹாசனுக்காக காசை வாரி இறைக்கும் ஷங்கர்?

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ரூ.30 கோடி ரூபாய் செலவில் பாடல் ஒன்றை ஷங்கர் எடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2

2024ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ஷங்கர் இயக்கும்  இந்தியன் 2. இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  இந்தியன் 2 படத்தை வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் , ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா  உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஏற்கனவே ஸ்டார், தங்கலான், விஷால்  நடித்திருக்கும் ரத்னம் மற்றும் பாலா இயக்கியிருக்கும் வணங்கான் உள்ளிட்டப் படங்கள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான நிலையில் இந்தப் படங்களுடனான போட்டியை தவிர்க்கும் பொருட்டு இந்தப் படத்தை மே அல்லது ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை படப்பிடிப்பு

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. கடந்த ஆண்டு முதல் முழுவீச்சில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை, ஆந்திரா, தாய்வான், ஜோகன்ஸ்பெர்க் , போபால் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் இப்படத்தின் ஷெடியூல் ஒன்று முடிவடைந்தது. இதில்  நடிகர் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவருக்கும் இடையிலான பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சில கால இடைவெளிக்குப் பின் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.30 கோடி செலவில் பாடல்

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பின் பகுதியாக பாடல் ஒன்று எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் பாடல் ரூ.30 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் இந்தப் பாடலில் நடிக்க இருக்கிறார்.


மேலும் படிக்க : ம.நீ.ம.விற்கு ஒரு ராஜ்ய சபா இடம்! மக்களவையில் போட்டியில்லை! ஆனால் ஆதரவு உண்டு: கமல்ஹாசன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget